பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 மலரும் நினைவுகள் போது, உணர்ச்சிக்கு அதிக வேகமும் அழுத்தமும் ஏற்பட்டு விடுகின்றது. ஆனாத, யானாம் என்ற எதுகை களிலும் இது பாயும் போது நம்மை உணர்ச்சியின் கொடு முடிக்கே இட்டுச் சென்று விடுகின்றது. இவ்வாறு எதுகை யாலும் மோனையாலும் சொற்கட்டுகளாலும் ஏற்படும் ஒலி நயம் (Rhythm) கவிதைக்கு உயிராக அமைந்து விடு கின்றது என்று விளக்கினார்கள் டி. கே. சி. கவிதையின் உயிர்நிலை அதன் வடிவத்தில் தான் (Form) உள்ளது, அதன் பொருளில் இல்லை என்பதை அடிக்கடி வற்புறுத்தி வந்தார்கள். இந்த வடிவத்தை உண்டாக்குவதும் உணர்ச் சியே, பொருள் அல்ல என்றார்கள். ஓர் உண்மையான உணர்ச்சி ஒரு கவிஞனின் இதயத்தை ஆட்கொண்டு விட்டால், அவன் அதற்குமேல் செய்வது ஒன்றும் இல்லை; அவனது தாய்மொழி அவனுடைய இதயத்தில் பாய்ந்து, அந்த உணர்ச்சியை உயிருடன் சேர்த்துக் கட்டி அதை ஒரு கவிதையாக உறையச் செய்து விடுகின்றது. கவிஞனுக்கும் கவிதைக்கும் இதற்குமேல் சம்பந்தம் இல்லை என்று கூடச் சொல்லி விடலாம். உண்மையான, வளமான, ஓர் உணர்ச்சியை அவன் பெற வேண்டும், அவ்வளவு தான்; அவனது உள் மனம் அந்த உணர்ச்சிக்குக் கவிதை உருவம் கொடுத்து விடும். தேன் இறுகி இறுகிக் கற்கண்டு ஆவது போல, உணர்ச்சி இறுகி இறுகிக் கவிதை யாக வடிவெடுத்து விடும் என்றார்கள். கவிஞனுடைய உள் மனத்தில் அவன் கற்ற யாப்பிலக்கண அறிவு, மொழி அறிவு, அநுபவ அறிவு-இவையெல்லாம் படிந்து கிடக் கின்றன. உண்மை உணர்ச்சி இந்த அறிவையெல்லாம், கவிஞனைக் கேட்காமலேயே, பயன்படுத்திக் கொண்டு, கவிதையின் வடிவத்தை வார்த்து விடுகின்றது என்று விளக்கினார்கள். கம்பன் திருநாள் தொடங்கின நாள் பிற்பகலில் 2-30க்கு அமராவதி புதுாரில் திரு. சொ. முருகப்பனார். நடத்தி வந்த மகளிர் இல்லத்தில் நடைபெற்ற ஆண்டு.