பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரசிகமணி டி. கே. சி. 29 1

  மாதர்கள் கற்பின் மிக்கார் 
    கோசலை மனத்தை ஒத்தார் 

வேதியர் வசிட்டன் ஒத்தார்

    வேறுள மகளிர் எல்லாம் 

சீதையை ஒத்தார் அன்னாள்

    திருவினை ஒத்தாள்: அவ்வூர் 

சாதுகை மாந்தர் எல்லாம்

     தயரதன் தன்னை யொத்தார்."

இது வை. மு. கோ. பதிப்பிலுள்ளபடி இருக்கும் பாடல். "மாதர்கள் கற்பின் மிக்கார்' என்றவர் பின்னர் வேறுள மகளிர் எல்லாம்' என்று சொன்னால் எந்த மகளிரைக் குறிக்கின்றார் கவிஞர் என்ற வினா எழுகின்றது: இப்படி எழுவதும் இயற்கையே. அயோத்தி மாநகரிலுள்ள பெண் களைக் கற்புடைமாதர் , மற்ற மாதர்' என்று பாகுபாடு செய்வாரா கம்பர் பெருமான்? இஃது எவ்வளவு அசம்பா விதம்? இதனை நன்கு அறிந்து சிந்தித்து முடிவு செய்த பிறகு தான் டி, கே. சி, திருத்துவார்.

  மாதர்கள் வயதின் மிக்கார்
     கோசலை மனத்தை ஒத்தார்; 
  வேதியர் வசிட்டன் ஒத்தார்; 
     வேறுள மகளிர் எல்லாம் 
  சீதையை ஒத்தார்; அன்னாள்
      திருவினை ஒத்தாள்; அவ்வூர் 
  சாதன மாந்தர் எல்லாம்
       தயரதன் தன்னை ஒத்தார்.
இது டி. கே. சி யின் கம்பராமாயணத்தில் உள்ள திருத்தம் பெற்ற பாடல், என்ன அற்புதம்! பெரிய அபவாதத்தை யல்லவா எவ்வளவோ எளிதாக மாற்றி விடுகின்றார் டி.கே.சி. இந்தத் திருத்தத்தை எதிர்ப்பவர்கள் கம்ப


9. அயோத்தி. கைகேசிசூழ்வினை-66