பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 2 மலகும் நினைவுகள் இவரது புலமையை நன்கு அறிந்த திரு. இராமசாமி கவுண்டர் (முதல்வர், நகராண்மைக் கழகக் கல்லூரி சேலம்) இவரைத் தம் கல்லூரிக்கு விரிவுரையளராாக அமர்த்திக் கொண்டார் என்றும் குறிப்பிட்டேன். இத்தகைய பெரும் புலமை மிக்கவர் ஒருவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்ற வாய்ப்பு பெற்றால் பல்கலைக் கழகத்திற்குப் பெருமை என்றும் பேச்சோடு பேச்சாகச் சொல்வி வைத்தேன். இந்தக் காலத்தில்தான் சென்னை மாநிலக் கல்லுரியில் தமிழ்த்துறைத் தலைமைப் பேராசிரியராகப் பணியாற்றிய திரு. தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் வந்திருந்தார்கள். இருவரும் விருந்தினர் மாளிகையில் சிற்றுண்டி உண்ட போது தம்மை இப்பல்கலைக் கழகத்தில் டாக்டர்.ஏ. சி. செட்டியார் இருந்த இடத்தில் (திரு.ஏ.சி. செட்டியார் அப்போது ஏதோ கருத்து மாறுபாட்டால் பதவியி லிருந்து விலகி இருந்தார், நியமிக்கலாம் என்று கருதித் தம்மை துணை வேந்தர் அழைத்திருப்பதாகவும், அதன் பொருட்டே தாம் வந்திருப்பதாகவும் தெரிவித்தார். ஒன்றிரண்டு மாதங்களில் நியமனமும் பெற்றார். இப்படிப் பிள்ளையவர்கள். தமிழ்த்துறையை நல்லாசிரியர்களால் வளமாக்கினார் அப்பொழுது காரைக்குடியில் எனக்குப் பேராசிரியர் பதவி வரும் நிலையில் இருந்தது. திரு. தி மூ. நாராயணசாமிபிள்ளை தம்முடைய துணை வேந்தர் பதவிக்காலம் முடிந்ததும் திருச்சி சென்று விட்டார். 1950-மார்ச்சுத் திங்களில் திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் முதன்முதலாகத் தமிழ்த் துறையை தொடங்க நினைத்து விரிவுரையாளர் பதவிக்கு விளம்பரம் செய்திருந்தார்கள். காரைக்குடியில் அப்பொழுது பேராசிரியர் பதவி எனக்குத் தரப் பெற்றிருந்தது (1958முதல்) காரைக்குடியில் பேராசிரியர் ஊதியம் 200-500 என்றிருந்தது. ஆனால் அது உயர்த்தப்படும் திட்டமும் ஆலோசனையில் இருந்தது. திருவேங்கடவன் பல்கலைக் கழகத் தமிழ் விரிவுரையாளர் திட்டம் 250-500 என்றி