பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 மலரும் நினைவுகள் காலம் ஆவதும் குறுகிய சீர்களைப் படிப்பதற்குக் குறைந்த காலம் ஆவதும் ஆகிய குறிப்புகள் செல்வம் சேர்வதற்கு அதிகக் காலம் ஆவதையும் அது அழிவதற்குக் குறைந்த காலம் ஆவதையும் அற்புதமாகப் புலப்படுத்துகின்றன. அன்புப் படையல் : எளியனான அடியேன் இப்பெரு மக்னாருக்கு ஒரு நினைவுச் சின்னம் ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்ததுண்டு. பாரதி நூற்றாண்டில் வெளி யிட்ட நான்கு நூல்களில் ஒன்றாகிய குயில் பாட்டுஒரு மதிப்பீடு' என்ற சுவை நூலை-திறனாய்வு நூலைஇவருக்கு, புனிதகுற் றாலத் தருவியின் சுகத்தைப் புது மது வாக்கிஅம் மதுவை இனியநல் அமுதாய் உயர்த்திநற் றமிழில் இன்பமே மணந்திடக் கலந்து தனியருள கலைஞர்; ரசனையே வடிவாம் நல்லுளம் பெற்றமெய்ஞ் ஞானி கனிவுறும் அன்பர் எங்கள் டி.கே.சி கழற்கிந்நூல் சமர்ப்பணம்; வாழி! என்ற பாடலால் அன்புப் படையலாக்கி மகிழ்கின்றேன். ஆனால் டி. கே. சி. அவர்கள் என்னிடம் வளர்த்த சுவை யுணர்வுக்கு நான் தரும் இந்த நூல் ஈடாகாது. நான் அவரிடம் கொண்டுள்ள பக்திக்கு இஃது ஒர் அறிகுறியே. ரசஞ் ஞானி : டி.கே.சி யின் அருமை மகன் தீபன் முப்பத்திரண்டு அகவையில் திருநாடு அலங்கரித்து விடுகின் றார். இந்தச்செய்தியை அறிந்த கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை ஒரு பாடலை எழுதி டி. கே. சிக்கு அனுப்பி வைக்கின்றார்.