பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. கம்பன் அடிப்பொடி சா. கணேசன் (LDສລບພໍ படுவாய் மனமே! கேள் விண்ணின் இடிமுன் விழுந்தாலும் பான்மை தவறி நடுங்காதே, பயத்தால் ஏதும் பயனில்லை: யான்முன் உரைத்தேன் கோடிமுறை; இன்னும் கோடி முறைசொல்வேன்; ஆன்மா வான கணபதியின் அருளுண்டு அச்சம் இல்லையே. - விநாயகம் நான்மணி மாலை-23 என்ற பாரதியாரின் கணபதி வணக்கத்துடன் கம்பனடிப் பொடியைப்பற்றிய நினைவுகள் மலர்கின்றன. பல்வேறு விதமான கவலைகளுடன் மன அமைதியின்றி இருந்த எனக்கு சா. கணேசனிடமிருந்து வந்த தந்தி சஞ்சீவிமருந்து போல் அனைத்துக் கவலைகளையும் போக்கியது. புதிதாகத் தொடங்கப் பெற இருக்கும் அழகப்பர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக வந்து சேரும்படித். தந்தியின் வாசகம் இருந்தது. மறுநாள் முதல்வர் ஐ. நாராயண மேனனிடமிருந்து (ஐ. என். மேனனிட மிருந்து) விளக்கமான கடிதமும் வந்தது. என் வாழ்க்கை யில் எவரிடமும் எந்தக் காலத்திலும் இத்தகைய உதவி