பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் அடிப்பொடி சா. கணேசன் soa சித்தி ரத்தின் அலர்ந்தசெந் தாமரை ஒத்தி ருக்கும் முகம்." என்று கூறுவான். அண்மையில் முதலமைச்சர் பதவியைத் துறந்த ஓ.பி.ஆரின் முகத்தில் இதனைக் காண்முடிந்தது. ஒர் இல்லறத் துறவியாகவே வாழ்ந்த அப்பெருமகனாரைக் கண்டு மகிழ்ந்தது என் பெரும்பேறாகக் கொண்டேன். 'நல்லாரைக் காண்பதுவும் நன்றே" என்பது ஒளவைப் பாட்டியின் வாக்கல்லவா? சுமார் பகல் ஒரு மணிக்கு சா. க. வையும் மெளனசாமி யையும் இட்டுக் கொண்டு என் வீடு வந்து சேர்ந்தேன். விருந்து சுமார்தான். எலுமிச்சைப்பழ சாதம், தேங்காய்ச் சாதம், வடை, சேமியா பாயசம் சிறப்புக் கூறுகள். ஏனையவை நடைமுறையில் உள்ள உணவு வகைகள்தாம். காரைக்குடி வாழ்வில் எனக்கு உணவு அளித்த கணேசப் பெருமானுக்கு சா.க.மூலம் அமுது படைத்ததாகவே கருதி என் மனம் நெகிழ்ந்தது. விதுரன் திருமாளிகைக்குக் கண்ணன் எழுந்தருளியபோது விதுரன் பெற்ற மகிழ்ச் சியை வில்லிபுத்துராழ்வார், என்ன மாதவம் செய்தது இச்சிறுகுடில்?’’ என்று காட்டுவார். அவனது மகிழ்ச்சியை ஒத்தது என் மகிழ்ச்சி. பின்னர் ஒருமுறை (1954) என் மகன் இராமலிங்கத்துக்கு வித்தியாப்பியாசம் தொடங்கப் பட்டபோது பல பெரியார்கட்கு அளிக்கப்பட்ட விருந்தி லும் இப்பெருமகன் பங்கு கொண்டார் என்பது என் நினைவு. விருந்து சிறிதே. என்னையும் பொருட்படுத்தி 2. டிெ சுந்தர. காட்சி-20 3. வாக்குண்டாம்-8 4. வி.பா. கிருட்டிணன் துரது-80