பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் அடிப்பொடி சா. கணேசன் ぎ勢5 விநாயகப் பிள்ளையார்- கற்பக விநாயகர்; இவர் அசைக்க முடியாத பிள்ளையாராக அசைக்க முடியாத கணபதியாக அமர்ந்து விட்டார் . இந்த பிள்ளையார் அமர்ந்த இடம் முன்னர் ஈக்காட்டுர், மருதங்குடி, திருவீங்கைக்குடி என்ற பெயர் களால் வழங்கப்பட்டது என்றும், பிள்ளையாரின் ஆதிக்கம் அதிகமாகவே ஊரும் பிள்ளையார் பட்டி என்று வழங்கப் பட்டது என்றும், இப்பெயரே நிலைத்து விட்டது என்றும் கல் சொல்லும் கதை கூறும் சா.க. கூறினார். ஆதலால் நரசிம்மவர்மனால் உருவான குடைவரைக் கோயில் நாளடைவில் விரிந்து வளர்ந்து விட்டது என்றும் விளக்கினார். இந்தக் கோயிலில் மார்கழியில் நடைபெறும் திருநாளும் விநாயக சதுர்த்தியும் இரண்டு விழாக்கள் என்றும் இவற்றுள் விநாயக சதுர்த்தியே பெருந்திருவிழா என்றும் தெளிவு படுத்தினார். இங்குள்ள விநாயகரது துதிக்கை வலஞ்சுழித்து வலம்புரி விநாயகராக இருப்பதையும், பிற இடங்களில் பிள்ளையாரிடம் காணப்பெறும் நான்கு கைகளுக்குப் பதிலாக இரண்டு கைகள் இருப்பதையும் எடுத்துக் காட்டினார் சா.க. ஆதியில் இங்ங்னம் இரண்டு திருக்கை களுடன் இருந்துதான் நான்கு திருக்கரங்களுடன் எழுந்து, நடந்து, நின்று, நடமாடி, பெருச்சாளியிலும் (மூஷிகம்) சிம்மத்திலும் ஏறிச் சவாரி செய்து கலைஞர் சிந்தனையில் வளர்ந்திருக்க வேண்டும் என்றும் விளக்கினார். இவற்றையெல்லாம் விளக்கவும், திருக்கோயிலைச் சுற்றி வரவும் இரண்டரை மணிநேரம் ஆயிற்று. இருவரும் கோயில் விடுதியில் உண்டோம். கோயிலைச் சார்ந்தவர் மூன்றனாவும் உணவுக்குச் செலுத்த வேண்டும் என்றும்,அவர் இட்டுச் செல்லும் விருந்தினருக்குக் கட்டணம் இல்லையென்றும் ஒரு மரபு இருந்து வருவதை க. நி.-20