பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.68 மலரும் நினைவுகள் நினைவு-4 : நா. செல்வராசன் என்ற ஒரு மாணவன் பயிற்சிக் கல்லூரியில் படித்து வந்த காலத்தில் (1953-54 என்பதாக நினைவு) அவனுக்குத் திருமணம் கூடியது. அவன் சா. க. வே தன் திருமணத்தைத் தமிழ்த். திருமணமாக நடத்தி வைக்க வேண்டும் என ஆசைப் பட்டான். அவன் துறையூருக்கு அருகிலுள்ள செங்காட்டு பட்டியைச் சேர்ந்தவன். உயர்நிலைப்பள்ளியிலும் என் மாணவன். கடவுளர்களிலேயே நினைத்தவுடன் வரவழைக்கக் கூடிய ஒருவர் உள்ளார் என்றால் அவர் விநாயகப் பெருமானே. சாணத்தையோ மஞ்சள் பொடி யையோ கொண்டு அவரைச் சிருஷ்டி செய்து தலையில் அருகம் புல்லைக் குத்தி வைத்து விட்டால் போதும்; அந்த உருவத்தில் எழுந்தருளி விடுகின்றார். அவரே நம் காரியத்தைத் தடையின்றி நடத்தி வைப்பார் என்று நம்பு கின்றனர் மக்கள். சா. க. அவர்களும் அங்ங்னமே நல்ல காரியம் நடைபெறும் இடத்திற்கு மகிழ்ச்சியுடன் எழுந்த ருளுவார். நானும் அந்த மாணவனும் அவரை அணுகி னோம். மாணவன் தாங்கள் பெருமனம் கொண்டு எங்கள் சிற்றுருக்கு எழுந்தருளி என் திருமணத்தைத் தமிழில் நடத்தி என்னை ஆசீர்வதிக்க வேண்டும்' என்று வேண்ட அவரும் மகிழ்ச்சியுடன் அவ்வேண்டுகோளை ஏற்றுக் கொண்டார். திருமணத்திற்கு முதல்நாள் மாலை இராமேசுவர இருப்பூர்தி விரைவு வண்டியில் புறப்பட்டுத் திருச்சியை அடைந்தோம். அசோக்பவன்’ விடுதியில் அன்றிரவு தங்கி மறுநாள் அதிகாலை குளியல், சிற்றுண்டி முதலிய வற்றை முடித்துக் கொண்டு மகிழ்வுந்து ஒன்றை அமர்த்திக் கொண்டு பயணப்பட்டோம்; காலை எட்டு மணிக்கே செங்காட்டுப்பட்டியை அடைந்து விட்டோம். ஊர்ப் பெருமக்கள் காரைக்குடிக் காந்தியை மிக்க ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். காந்தியைப் போலவே சட்டை போடாத சா: க. வைக் கண்டு மதிப்