பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.14 மலரும் நினைவுகள் முதல் நூலைப்படங்களுடன் தயார் செய்தேன். இதனையும் உற்று நோக்கினார். இவரது பரிந்துரையால் எஸ். ஆர். சுப்பிரமணிய பிள்ளை பதிப்பகத்தார் வெளியிட்டனர் (பல விளக்கப் படங்களுடன்)- 1958). இவை தவிர கல்வி உளவியல்’, ‘கவிதை அநுபவம்” என்ற நூல்களின் படிகளையும் நன்கு நோக்கி ஆசி கூறினார். இவை இரண்டும் நான் திருப்பதி சென்ற பிறகு 1961 இல் தான் வெளிவந்தன. நினைவு-8 : நான் திருச்சியில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது திரு.வி.க. வின் பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை என்ற நூலைப் படித்தேன். அதன் முகவுரையில் அறிவியலடிப்படையில் புதிதாக இல்லற வாழ்க்கையில் புகும் மணமக்களுக்குப் பயன்படும் வகையில் நூலொன்று படைப்பவர் சிறந்த, தொண்டராகக் கருதப் பெறுவார்’ என்ற குறிப்பு என் உள்ளத்தை நெருடிக் கொண்டிருந்தது. Dr. Hanna, Dr. Abrahamtone என்ற இரண்டு மருத்துவ நிபுணர்கள் Grap;< 366&sr-37601_u?swold fig, A Marriage Manual என்ற ஆங்கில நூலைப் படித்துக் கொண்டிருந்தபோது, திரு.வி.க.வின் குறிப்பு நினைவிற்கு வர, இந்த நூலையும் வேறு பல அடிப்படையாக ஆங்கில நூல்களையும் துணை கொண்டு பத்து இயல்களில் ஐம்பது கடிதங்களில் நூலொன்றை உருவாக்கினேன். கடித உத்தியைக் கையாண்டதை மிகவும் பாராட்டினார் சா. க. இந்த நூல் உருவாகும்போது இதில் மிக்க அக்கறை காட்டிப் பல குறிப்புகளை ஆங்காங்கே தந்து கொண்டிருந்தார். 'மன மக்களுக்கு’ என்ற திருநாமம் சூட்டியிருந்தேன். இது காம நூல்' என்ற தவறான கருத்தைப் பொது மக்களிடம் விளைவித்து விடுமோ என்ற அச்சம் இருந்து வந்தது. சா. க.வும் நானும் பல நாட்கள் சிந்தித்து இல்லறநெறி' என்று புதுப்பெயர் சூட்டினோம். ஆனால் 1958-இல் உருவான இந்த நூல் 'கழகத்திடம்"