பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் அடிப்பொடி சா. கணேசன் 蔚互等 ஐந்தாண்டுகள் கூண்டுப் புழுவாகவே கிடந்தது. பின்னர் இதன் படியைத் திரும்பப் பெற்று தமிழ்ப்புத்தகாலயம் (சென்னை-5) என்ற நிறுவனத்தின் மூலம் வெளியிட்டேன் (1964). திருப்பதியிலிருந்தபோது நூல் வெளி வந்ததால் நூலை 'வேலனுக்கு வேங்கடத்தான் கடிதங்கள்’ என்ற முறையில் மாற்றி வெளியிட்டேன். நினைவு-9 : காரைக்குடியில் நான் பணியாற்றிய கல்லூரியில் பேராசிரியர் பதவி ஒன்று காவியாக இருந்தது. அதற்கு நான் முயன்றேன். வேறு சிலரும் முயன்றனர். அப்போது வள்ளல் அழகப்பர் மறைந்து சில ஆண்டுகள் கழிந்த நிலை. அழகப்பர் அறத்தின் செயலராக இருந்தவருக்கும் சா.கா. வுக்கும் கருத்து வேறுபாடு. ஆனால் செயலரிடம் நல்லெண்ணத்தை வளர்த்துக் கொண்டிருந்தேன்-என் உழைப்பினால், இந்நிலையில் என் தோழ ஆசிரியர்களில் இருவரும் அழகப்பர் அறத்தின் மேலாளரும் மேற்கொண்ட ஒரு சதியால் இப்பதவி எனக்குக் கிடைப்பதில் ஒரு தடைக்கல் எழுப்பப்பட்டது. இந்தச் சதித்திட்டத்தில் எங்கள் கல்லூரி முதல்வரும் கலந்து கொண்டிருந்ததையும் அறிந்து கொண்டேன். இந்தத் தடைக்கல் விவரத்தை எழுதவே என் கை கூக கின்றது. இதனை அழகப்பர் அறத்தின் தலைவராக இருந்த திரு. சி. சுப்பிரமணியத்தின் (சென்னை மாநில கல்வி-நிதி அமைச்சர்) கவனத்திற்கும் கொண்டு வந்தேன். கவலை வேண்டா; உரிய நேரத்தில் கவனிப்பேன்’ என்று ஆசியுடன் உற்சாகம் ஊட்டினார். சா. க. நேராக இதில் தலையிட்டு உதவ முடியாத நிலை. முந்தைய செயலர் திரு K.W.AL.M. இராமநாதன் செட்டியார் (அறத்தின் முக்கிய உறுப்பினர்) அவர்களுக்குத் தொலைபேசி மூலம் என் நிலையை விளக்கினார். நானும் அவரைப் பார்த்து நிலையை விளக்கினேன். செயலரின் அழைப்பாலும் திரு இராய சொ. அவர்களின் தூண்டுதலாலும் கானாடு காத்தான் சென்று செயலரைப் பார்த்துப் பேசினேன்.