பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் அடிப்பொடி சா. கணேசன் & Iゲ தமிழன்னைக்குக் கோயில் அமைக்கவும் சா.க.வுக்கு ஒல்லும் வகையெல்லாம் உதவியது தி.மு.க ஆட்சி. ஒரு காலத்தில் தந்தை பெரியாரையும் அறிஞர் அண்ணாவை யும் வெறுப்புடன் நோக்கினார் சா.க.அந்த அண்ணாவின் காலத்தில்தான் எல்லாவித ஏற்றங்களும் சா. க.வை வந்தடைந்தன. நினைவு-10 : 1977-ஆகஸ்டுத் திங்கள் (1-3)செப்டம்பரில் திருப்பதிப் பணியிலிருந்து ஒய்வு பெற வேண்டிய நிலை-U, C.C.யின் ஆதரவில் ஒரு கம்ப ராமாயணக் கருத்தரங்கம் திருப்பதிப் பல்கலைக் கழகத்தில் நடைபெற ஏற்பாடு செய்தேன். கம்பன் புகழ் பரப்ப முதன் முதலாகத் தமிழகத்தில் பிள்ளையார் சுழி' போட்ட சா. க.வையும் அரசியலிலிருந்து ஒய்வு பெற்று நெல்லூரில் நிரந்தரமாகக் குடியிருந்த திரு B. கோபால் ரெட்டியையும் (முன்னாள் மத்திய அமைச்சர், உத்தரப் பிரதேச முன்னாள் ஆளுநர், ரசிகமணியின் தலையாய சீடர் ஜஸ்டிஸ் மகராஜனையும், இணையற்ற இலக்கிய வரலாற்று ஆசிரியர் மு. அருணாசலத்தையும் கருத் தரங்கில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்ள ஏற்பாடு செய்தேன். தமிழில் சா.கவுக்கு ஒரு வரவேற்பு இதழும், தெலுங்கில் திரு. B. கோபால்ரெட்டிக்கு ஒரு வரவேற்பு இதழும் வாசித்து அளித்து பெருமைப்படுத்தி னேன். சா.க.வுக்குத் தந்த இதழை மட்டிலும் ஈண்டு தருகின்றேன். வரவேற்பு மடல் வண்ணமுறு பொதியமலை தன்னில் தோன்றி வளம்நல்கும் வையையினில் தவழ்ந்து வேம்பன் புண் ணியநற் சங்கத்தில் வீற்றி ருந்து புகழ்பெற்ற தமிழன்னை செங்கோல் ஒச்சக்