பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. தமிழ்க்கடல் இராய. சொக்கலிங்கனார் 1949-2 razaga கம்பன் திருநாளுக்குப் போயிருந்தபோது முதன் முதலாக எனக்கு அறிமுகப் படுத்தப்பெற்ற பெருமகனார் இவர். அதன் பிறகு 1950 - ஜூலை முதல் அழகப்பர் ஆசிரியப் பயிற்சிக்கல்லூரி யில் பேராசிரியர் பணியை ஏற்றேன். காரைக்குடிப் பத்தாண்டு வாழ்வில் மிக அதிகமான நெருக்கத்துடன் பழகியவர்களுள் இப்பெரும்புலவர் ஒருவர். பெரும்பாலும் மாலை நேரங்கள் (6-8 மணி) இந்து மதாபிமான சங்கத் தில் இவருடன்தான் கழியும். மதுரைத் தமிழ்ச் சங்கத்துத் தலைவராக ஆலவாய் அவிர் சடைக் கடவுள் சொக்க விங்கப் பெருமான் இருந்து வந்ததுபோல் பாரதியாரால் பாராட்டுப்பெற்ற காரைக்குடி இந்து மதாபிமான சங்கத்தின் தலைவராக வீற்றிருந்து செயற்கரிய செயல்கள் புரிந்து வந்த மாமேதை தமிழ்க் கடல் இராய. சொ. இப்போது இப்பெரும் புலவரை நினைக்கும்போது பல நினைவுகள் மலர்கின்றன. அவற்றுள் சில ஈண்டுப் பதிவாகின்றன. காரைக்குடிப் பணியேற்ற ஒருவார காலத்திற்குள் காரைக்குடியிலிருந்து சுமார் நான்குகல் தொலைவிலுள்ள இராய.சொ. வாழ்ந்து வந்த ஊராகிய அமராவதி புதுார் சென்றேன் இரண்டு ஆப்பிள் பழத்துடன். பேருந்து நிற்கு மிடத்திலிருந்து இவர் இல்லம் சுமார் முக்கால் ஃபர்லாங் தொலைவில் உள்ளது. அங்குச் சென்றேன். உண்மையில்