பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க்கடல் இராய சொக்கலிங்கனார் 33 f" களும் எழுதப்பெற்ற பிறகு ஒருவர் தாமதத்துடன் வந்தாலும் இறுதியில் அவர் கையெழுத்திடலாம். அதன் பிறகு தலைவர் கையெழுத்திட்டு பதிவேட்டு வேலையை முடித்து விடுவார். அதன்பிறகு சிற்றுண்டி விருந்து நடைபெறும். ஒவ்வோர் உறுப்பினரும் ஒவ்வொரு கூட்டத்திற்கு விருந்தளிக்க வேண்டும். என் போன்ற ஏழ்மை நிலையிலிருப்பவர்கள் உணவு விடுதிப் பொருள் களை வாங்கி விருந்தளிப்பார்கள். செல்வச் செழிப்புள்ள நகரத்தார் உறுப்பினர் வீட்டிலிருந்தே தயாராகியுள்ள பொருள்களை மகிழ்வுந்தில் சமையல் காரப் பையன் கொண்டு வருவான். அன்று விருந்து பலமாக இருக்கும். நிகழ்ச்சிப் பதிவேட்டை நோக்கினால் யார் யார் எப்பொழுது வந்தார் என்ற விவரத்தை அறிந்து கொள்ள Gł) frt.0. நினைவு-3 : யான் காரைக்குடி சென்ற இரண் டாண்டுகளில் அமராவதி மகளிர் இல்லத்தில் சொ. முருகப்பா அவர்கள் கம்பராமாயண ஆராய்ச்சி ஒன்று நடத்தினார்கள். அதற்குத்தமிழ்க் கடல்இராய.சொ.தான் தலைமை. நான், அழகப்பா கல்லூரி க. தேசிகன் பூ. அமிர்தலிங்கம் ஆகியோர் இதில் வழக்கமாகக் கலந்து கொள்வோம்! ஒவ்வொரு சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெறும். சனிக் கிழமை காலையில் சிற்றுண்டிக்குப் பிறகு மகளிர் இல்லம் செல்வோம்; ஞாயிறு மாலை 6 மணிக்குத் திரும்புவோம். இக்காலத்தில் உண்டி, உறையுள் எல்லாம் மகளிர் இல்லத் தில்தான். இப்படி இரண்டாண்டுக் காலத்திற்குமேல் ஆராய்ச்சி நடை பெற்றது. இதன் முக்கியப்பணி ஒவ்வொரு பாடலாகப் படித்து செருகு கவிகள்’ எனக் கருதப் பெறும் பாடல்களை நீக்குவதுதான். பொதுவாக க. தேசிகன்தான் பாடல்களைப் படிப்பார். இந்தக் குழு பாடல்களைச் சோதிக்கும். இந்தச் சோதனையில் சொ. முரு. தான் பாடல்களின் நாடி பிடித்துப் பார்க்கும்