பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க்கடல் இராய. சொக்கலிங்கனார் 3.35 செட்டியார் (காந்தி சதுக்கம் அருகில்), திருப்பதி செட்டியார் (முத்துப்பட்டினம்) அ.லெ. நடராசன் (புதுமைப் பதிப்பகம்), இராமநாதன் செட்டியார் (இருப்பூர்தி நிலையச் சாலை), தேவராயன் செட்டியார் (முத்துப் பட்டினம்) போன்ற அன்பர்கள் வைத்தவை. விருந்தின் போது பேச்செல்லாம் இலக்கியம் பற்றியே இருக்கும். நினைவு-7 : செட்டிநாட்டுப் பகுதியில் செல்வர் கள் வீட்டில் நடைபெறும் திருமணம், புதுமை, மணிவிழா நிகழ்ச்சியின்போது நூல்களை அன்பளிப்பாக வழங்கும் ஒரு மரபு இருந்து வருகின்றது, அந்தந்த நிகழ்ச்சிக்கு ஏற்பப் பொருத்தமான நூல்களைத் தொகுத்து அச்சிட்டுத் தரும் பொறுப்பு இராய.சொ.விடம் இருக்கும். பாவை பாட்டு , ஆழ்வார் அமுது’, சீதைத் திருமணம்’, மாதவன் மாலை போன்ற தொகுப்புகள் அவற்றுள் சில. இவை அச்சேறும்போது பார்வைப்படிகளைத் (Proofs) திருத்தும் பொறுப்பு பெரும்பாலும் என்னைச் சார்ந்திருக் கும். இப்பணியை நான் மிக்க அன்புடன் செய்து அவருடைய பாராட்டைப் பெறுவேன். ஆழ்வார் அமுது' என்ற நூல் நாலாயிரத்திலிருந்து பொறுக்கி எடுக்கப் பெற்ற நானுாறு பாசுரங்களின் தொகுப்பு; குறிப்புரை இராய.சொ.வால் எழுதப் பெற்றது. இந்த நூல் இராய வரம் ப.வ. குழந்தையன் செட்டியார் மகன் திருமணவிழா வில் வழங்கப்பட வேண்டிய நூல். இது புதுக்கோட்டையில் அச்சாயிற்று; அச்சகம் பெரியது. மூன்றே நாட்களுக்குள் அச்சு வேலை முடித்துத் தந்தார் அச்சக அதிபர் திரு சக்தி செட்டியார். மூன்று நாட்கள் நான் இராய.சொ.வுடன் திரு சக்தி செட்டியாரின் இல்லத்தில்தான் தங்கி இருந் தேன். பார்வைப் படிவங்களைப் பார்ப்பதற்காக என்னைத் தம்முடன் வருமாறு பணித்தற்கேற்ப அவருடன் சென்றிருந்தேன். திரு சக்தி செட்டியார் தம் விருந்து உபசரிப்பால் எங்களைத் திணற அடித்து விட்டார். சில