பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க்கடல் இராய. சொக்கலிங்கனார் 33霄 ஒருநாள் சங்கத்தில் இராய சொ. என்னிடம் 'தமிழ்க் கடல்' என்ற விருது தமிழகத்தில் எனக்குத்தான் முதன் முதலாக வழ்ங்கப்படப் போகின்றது என்று கருது கின்றேன்’ என்றார். அஃது பெரும்பாலும் உங்கட்கு இரண்டாவதாக இருக்கும்' என்றேன். எப்படி?’ என்றார். சங்கத்தில் கட்டமைத்து வைக்கப் பெற்றிருந்த ஞானசாகரம் (பின்னர் அறிவுக்கடல்' என்று பெயர் மாற்றம் செய்யப் பெற்றது) என்ற ஒரு தொகுதியிலிருந்து மறைமலையடிகள் இந்த விருது பெற்ற செய்தியை எடுத்துக் காட்டினேன். வியந்து போனார். நீங்கள் பெரிய ஆய்வாளராகத் திகழ்வீர்கள்; திகழவேண்டும்' என்று வாழ்த்தினார். இப்பெரியாரின் வாழ்த்தின் கனம்’ என்னை ஆய்வுப் பணியில் இன்றும் ஈடுபடுத்தி வருகின்றது என்பது என் அதிராத நம்பிக்கை. நினைவு-9:காரைக்குடிஇந்துமதாபிமான சங்கஆண்டு விழா ஒன்றில் தினமணி துணையாசிரியர்(தினமணிச்சுடரின் ஆசிரியர்) திரு ஏ. ஜி. வேங்கடாச்சாரி கலந்துகொண்டார். அப்பொழுது இராய.சொ. அவர்கள் என்னை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்போது திரு. வேங்கடாச்சாரி தினமணிச்சுடருக்குக் கட்டுரைகள் வழங்கு மாறு கேட்டார். கலிங்கத்துப்பரணி பற்றி என் ஐந்து கட்டுரைகள் அந்த வார இதழில் தொடர்ந்து வெளி வந்தன. இவற்றையும் வேறு நான்கு கட்டுரைகளையும் சேர்த்து கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி (மார்ச்சு-1957) என்ற தலைப்யில் நூலாக வெளியிட்டேன். இதற்கு இராய சொ.வை அணிந்துரை யொன்று அருளுமாறு வேண்டி னேன். அவரும் மனமுவந்து அறிமுகம் என்ற தலைப்பில் அரியதோர் அணிந்துரையை அருளினார். அதில், 'இந்தக் கலிங்கத்துப்பரணி என்ற அரிய நூலுக்குத் திறவு கோலாக அமைந்திருப்பது கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி’ என்னும் இந்த நூல். இத்திறனாய்வு நூலை எழுதியவர் என் அரிய நண்பரும், நன்கு கற்றவரும், வள்ளல் அழகப்ப ம நி-22