பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

345 மலரும் நினைவுகள் மகன் இராமலிங்கத்தின் திருமணத்திற்கு (1976) மிகவும்: உதவியாக இருந்தது, இக்காலத்தில் ராய. சொ. இரண்டாண்டுக் காலம் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் தமிழ் ஆராய்ச்சித். துறைப் பேராசிரியராகப் பணி புரிந்தார். வள்ளல் அழகப்பரின் கனவை அறக்கட்டளை நிறுவனத்தின் செயலராக இருந்த திரு. க. வெ. சித. வெ. வேங்கடாசலம் செட்டியார் நனவாக்கினார். இந்த இரண்டாண்டுக்காலம் (1962-64) கல்லூரி வளாகத்தில் ஆசிரியர் குடியிருப்பிலுள்ள இல்லம் ஒன்றில் வாழ்ந்தார். காரைக்குடி வந்திருந்தபோது ஒருமுறை இப்பெரும் புலவரை இந்த இல்லத்தில் சந்தித்து அளவளாவியதாக நினைவு . நினைவு-11 : தமிழ் ஆராய்ச்சிப் பேராசிரியராக இருந்த போதுதான் அழகப்பர் அறக்கட்டளை நிறுவனத் தின் செயலர் வேங்கடாசலம் செட்டியாருடன் திருத்தலப் பயணத்தை மேற்கொண்டு வைணவ சைவ வேறு பாடின்றி எல்லாத் திருக்கோவில்களையும் சேவித்தார். இக்காலத் தில் நான் குடும்பத்தைத் திருப்பதிக்குக் கொண்டு போய் விட்டேன்: அப்போது என் பிஎச். டி.க்கு நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தை ஆய்ந்து கொண்டிருந்த காலம். 1965 முதல் 1976 வரை வைணவத்திருப்பதிகள் 108ஐயும் சேவித்துக் கொண்டிருந்தேன். என் அருமை நண்பர் K. சீநிவாச வரதனைத் துணையாகக் கொண்டு காஞ்சி யிலுள்ள திவ்விய தேசங்களைச் சேவித்து வந்தபோது (ஜனவரி 1966) திருத்தலப் பயணத்தை மேற்கொண்டி ருந்த இராய, சோ. குழுவினரை காஞ்சி அட்டபுயகரத்தில் சந்தித்தேன். இக்காலத்தில் இத்திருக்கோயிலில் பகல் பத்து-இராப் பத்து உற்சவம் நடைபெற்றுக் கொண்டிருந்: தது. பொருளில் அதிக நாட்டங் கொண்டிருந்த இரு. வேங்கடாசலம் செட்டியாரை இத்திருத்தலப்பயணத்