பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க்கடல் இராய. சொக்கலிங்கனார் 341 தின் மூலம் இறையருளில் நாட்டம் கொள்ளச் செய்தது இராய சொ. வின் பெரிய சாதனை. பின்னர் இராய. சொ. தம் பயண அநுபவங்களை திருத்தலப் பயணம்' என்ற தலைப்பில் நூல் வடிவமாகச் செய்ததையும் அறிந் தேன். இதுகாறும் அந்த அரிய நூல் என் கண்ணில் படவில்லை ! இராய. சொ. ஒரு சிறந்த கவிஞர்; எழுத்தாளர்: சொல்லின் செல்வர் என்று பாராட்டக்கூடிய சிறந்த பேச்சாளர். காந்தி பிள்ளைத் தமிழ், காதற்பாட்டு, (தொகுப்பு), குற்றாலவளம் போன்ற நூல்கள் இவர்தம் நூல்களில் குறிப்பிடத்தக்கவை. 1966-சனவரிக்குப் பிறகு இப்பெருமகனைச் சந்திக்கும் வாய்ப்பில்லை. திருப்பதிக்கு வரவழைத்துப்பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் இப்பெரு மகனாரைப் பாராட்ட வேண்டுமென்று பல் நாட்கள் கனவு கண்டதுண்டு. ஆனால் அந்த என் கனவு நனவாக வில்லை. அதற்குள் அவர் திருநாடு அலங்கரித்த செய்தி தான் (30-9-1974) என்னை எட்டியது. என் வாழ்நாளில் தந்தைபோல் உற்ற துணையாக இருந்து எனக்கு ஆசி கூறி என் தமிழறிவை மெருகேற்றச் செய்து எண்ணத் தாலும், சொல்லாலும், செயலாலும், ஒல்லும் வகையெல் லாம் உதவியருளின இப்பெரும் புலவர் தமிழ்க் கடல் நிலை யாக என் உள்ளத்தில் இடம் பெற்றுத் திகழ்கின்றார். திரு. ஏ. கே. செட்டியார் தான் சொல்வார்: 'இராய சொ.க்குப் பிடித்தவை இரண்டு; ஒன்று தமிழ் . மற்றொன்று சீட்டாட்டம்.' பிறப்பு : 30-10-1898 சிவப்பேறு : 30-9 -1974