பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 மலரும் நினைவுகள் வழக்குரைஞர் அரங்கசாமி ரெட்டியார் காரைக்குடி வந்தார். நானும் அவரும் மகளிர் இல்லம் சென்றோம். சிறுவனைப் பார்த்து விட்டுச் சொ. முரு. வுடன் உரை யாடிக் கொண்டிருந்தோம். அப்போது திரு வழக்குரைஞர் ரெட்டியார், மகளிர் இல்லம் என்ற பெயர் சிறுவர்கள் படிக்கும் பள்ளிக்குப் பொருந்தவில்லையே’’ என்ற ஒரு வினாவை எழுப்பினார். அதற்கு சொ. முரு. தந்த விடை: " நான் மரகதவல்லியை மணந்து கொண்ட பின்னர் கைம் பெண்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும் பணியில் ஈடுபட் டேன். இளம் கைம்பெண்களுக்காகவே மகளிர் இல்லம்’ தோற்றுவிக்கப் பெற்றது. நோக்கம்: சிறிது படித்தவர் களை மேலும் படிக்கவைப்பது, கல்வி அறிவே இல்லாதவர் கட்கு எழுத்து வாசனையையாவது தருவது, அவரவர் திறமைக்குகந்தவாறு பயிற்சி திடுவது, பிறகு தக்கவர்க்கு மணம் செய்விப்பது என்ற முறையில் திட்டம் இருந்தது. இயன்ற வரை இவற்றை இலவசமாகச்செய்வது என்றிருந்தும், சமூகம் இதனைப் பயன்படுத்திக்கொள்ள வில்லை. கைம்பெண்கள் இந்த இல்லத்தில் அதிகமாகச் சேரவில்லை. எங்கட்கும் இதனால் ஊக்கம் குறைந்தது. வேறுவழி தோன்றவில்லை. சிறுபிள்ளைகட்கு நல்ல முறை யில் கல்வியளித்து அவர்களையாவது முன்னேற்றப் பாதை யில் கொண்டு செலுத்தலாம் என்று மகளிர் இல்லம்’ குழந்தைகள் இல்லமாகி குழந்தைகள் பள்ளியாகப் பணி செய்து வருகின்றது' என்றார். இது சொ. முரு. தமது வாழ்வில் மேற்கொண்ட தலையாய பணியாகத் திகழ்ந்தது. இவருக்குப் பின்னர் இப்பணி நின்று போயிற்று. நினைவு- 6 : பக்தி சாரருக்கு நாளடைவில் பாகவத நெறியில் இதயப் பசியும் ஆன்ம தாபமும் தீர்ந்து விசுவாசமும் சாந்தியும் கைகூடியதைப்போல் கம்பனில் ஈடுபாடுகொண்ட முருகப்பாவுக்குச் சாந்தியும் மனஅமைதி யும் தருகின்றது. இரசிகமணி டி.கே.சியின் நட்பைப் பெறு