பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 மலரும் நினைவுகள்: கைஅவண் நெகிழ்த லோடும் கடுங்கணை கால வாலி வெய்யமார் பகத்துள் தங்கா(து) உருவிமேக்(கு) உயர மீப்போய்த் துய்யநீர்க் கடலுள் தோய்ந்து தூய்மலர் அமரர் சூட்ட ஐயவெந் விடாத கொற்றத்(து) ஆவம்வந்(து) அடைந்த(து) அன்றே - வாலிவதை 15ே இதற்கு முன்னுள்ள, தன் அடி தாழ்த லோடும் தாமரைத் தடங்கண் ணானும் பொன்னுடை வாளை நீட்டி நீஇது பொறுத்தி என்றான்; என்னலும் உலகம் ஏழும் ஏத்தின; இறந்து வாலி அந்நிலை துறந்து வானுக்(கு) அப்புறத்(து) உலகன் ஆனான் டிெ 152 என்ற பாடலுடன் படலம் முடிந்து விடுகின்றது. தான் அங்கதனை அடைக்கலமாக ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக தன் அழகிய உடைவாளைக் கையி லெடுத்து நீட்டி நீ இது பொறுத்தி (கையிலேந்துக)என்று கட்டளையிட இதனைக் கண்ட ஏழு வகைப்பட்ட உலகங் களிலுள்ள உயிர்களெல்லாம் இராமனைத் துதித்தன: பின்பு வாலி இந்த உடம்பை விட்டு மேலுலகங்கட்கெல் லாம் அப்பாலுள்ளதான வீட்டுலகத்தை (பரமபதத்தை). அடைந்தவனானான். இவ்வாறு படலம் முடிந்த பிறகு வரும் பாடல் செருகப்பட்ட பாடல். இதற்கு மேலுள்ள சில பாடல்களை நோக்கும் போது இக்கருத்து வலிவடைகின்றது.வாலி தன் மார்பில் பாய்ந்த