பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளல் டாக்டர் இராம. அழகப்பச் செட்டியார் 韶57 பவர்கள் அழகப்பர் நிறுவிய கட்டடங்களை அணி அணி யாகக் கண்டு களிக்கலாம். அழகப்பா கல்லூரி, அழகப்பா ஆசிரியப் பயிற்சிக் கல்லூரி, அழகப்பா பொறியியற் கல்லூரி, அழகப்பா மகளிர்க் கல்லூரி (இப்போது இல் து இல்லை), அழகப்பா பல்தொழிற் கல்லூரி, அழகப்பா உடற்கல்விக் கல்லூரி, அழகப்பா மாதிரி உயர்நிலைப் பள்ளி, அழகப்பா மாண்டிசோரிப்பள்ளி, அழகப்பா தொடக்கப்பள்ளி, அழகப்பா ஆயத்தப்பள்ளி, அழகப்பா இசைப்பள்ளி மின்சார-வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் போன்ற பெயர்ப்பலகைகள் இருப்பூர்தி வழியின் மேல்புற மாக வரிசையாக இருப்புத் தாங்கிகள் மீது பொருத்தப் பெற்றுத் திகழ்வதைக் கண்டு மகிழலாம். அழகப்பர் தம் வாழ்க்கையைக் கல்விக்கே அர்ப்பணித் துக்கொண்ட கதையை ஒரு காவியமாக எழுதி மகிழலாம். என்றாலும், என்அரிய நண்பர் டாக்டர் வ. சுப. மாணிக்கம் (மதுரை-காமராசர் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர்) எழுதிய கொடை விளக்கு என்ற வெண்பா யாப்பில் அமைந்த நூல் அழகப்பர் செய்த கல்வித் தொண்டினை அற்புதமாகச் சித்திரித்துக் காட்டுகின்றது. வள்ளல் அழகப்பர் கல்வித் தொண்டிற்குத் தம்மை அர்ப் பணித்துக் கொண்ட தொடக்கமே விநோதமானது. 1950-சூலைத்திங்கள் முதல் அழகப்பர் நிறுவிய அழகப்பர் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியனாகப் பணியாற்றும் பேறு பெற்றவனாதலால் (1950 -1960) அழகப்பரைப் பற்றிய நேரில் கண்ட நிகழ்ச்சிகளும் கேட்ட ஒரு சில நிகழ்ச்சிகளும் மலரும் நினைவுகளாக இங்கு வெளிப்படுகின்றன. சென்னை அடையாற்றில் பிரம்ம ஞான சங்கத்தில் அனிபெசண்ட் அம்மையாரின் நூற்றாண்டு விழா (சூலை 3, 1947)- நாடு விடுதலை பெறுவதற்கு ஒரு திங்களுக்கு முன்னர்-நடைபெற்றது. நாடளாவிய சீரும்சிறப்பும்