பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளல் டாக்டர் இராம. அழகப்பச் செட்டியார் 359 இடைநிலை வகுப்பில் பயின்ற போது (1934-36) என் அருமைப் பேராசிரியர் மு. நடேச முதலியார் பாடமாக அமைந்த காண்டவ தகனச் சருக்கத்தை (வில்லி பாரதம்) விளக்கின காட்சிகள் நினைவிற்கு வந்தன. - ஒரு பாடலை நினைவு கூர்கின்றேன். எப்புறத்தினும் புகுந்துதிச் சூழ்தலின் ஏகுதற்(கு) இடம்இன்றி தப்புதல்கருத்(து) அழிந்துபேர் இரலையொ(டு) உழை இனம் தடுமாற மெய்புறத்துவெண் புள்ளிசெம் புள்ளி ஆய்விடும்படி விரைந்தோடி அப்புறத்துவீழ் பொறிகள், அவ்வவற்றினை அலங்கரித் தனஅன்றே.' இப்படிக் காரைக்குடிக் காடு சமநிலை ஆகும்போது உயிரினங்கள் பல்வேறு விதமாக வெருவியோடி இருக்க வேண்டும்; சில புல்டோசர்களின்கீழ் அகப்பட்டு மடிந் திருக்க வேண்டும். இவ்வாறு சீர்திருத்தப்பெற்ற நிலப் பரப்பே எல்லா நிலைப் பள்ளிகளும் கல்லூரிகளும் அமை யும் இடங்களாயின. இதனை. நிலமகள் கைவிட்ட நீள்சுரத்தை வீட்டுக் குலமகள் போலக் குறித்தான். என்றும், நரியிசைத்த காடு நகராய்ச் சிலம்பின் வரியிசைக்கப் பள்ளி வகுத்தான் ;-உரியசைத்துப் பாம்பா டிடமெல்லாம் பந்தா டிடமாகும்; தாம்பாடு கன்னியர்க்குத் தாம்." என்று அழகாகக் குறிப்பிடுவர் டாக்டர் வ. சுப. மாணிக்க 6了f了产。 1 . வி. பா: காண்டவத கன 6-19 2. கொடை விளக்கு (சூலை, 1957). 35, 36