பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60) மலரும் நினைவுகள் 1947-ஆகஸ்டில் அழகப்பா கல்லூரி தோன்றியது. 1948 சூலை 25-இல் மின்சார வேதியியல் ஆராய்ச்சி சிலை பத்திற்கு நேரு அவர்கள் அடிக்கல் நாட்டினார்; இப்போது நடைபெற்ற கால்கோள் விழாவில் வள்ளல் தம் வரவேற்புரையில் தாம் இனி மேல் நிறுவ எண்ணியிருக்கும் திட்டங்களை வெளியிட்டார். தொடர்ந்து அழகப்பா ஆசிரியப் பயிற்சிக் கல்லூரி (1950 ஜூலை), அழகப்பா பொறியியற் கல்லூரி, அழகப்பா மகளிர்க் கல்லூரி இஃது இப்போது இல்லை), அழகப்பா பல தொழில் கல்லூரி, அழகப்பா உடற் கல்விக் கல்லூரி (1956) அழகப்பா மாண்டிசோரிப் பள்ளி, அழகப்பா மாதிரி உயர்நிலைப் பள்ளி (1951), அழகப்பா தொடக்க நிலைப் பள்ளி, அழகப்பா ஆயத்தப் பள்ளி என்று அணி அணி யாக ஆண்டொன்றுக்கு ஒன்றோ, இரண்டோ என்னும் படிப் பள்ளிகளும் கல்லூரிகளும் ஆண்டு தோறும் தோன்றின. இவற்றையெல்லாம் கண்காணிக்க டாக்டர் * அழகப்பச் செட்டியார் கல்வி அறம்' என்ற நிறுவனமும் தோன்றியது. இங்குத் தொடக்க நிலைப் பள்ளியில் வந்து சேரும் சிறுவன் ஒருவன் எல்லா நிலைக் கல்வியும் பெற்றுத் தொழிற் படிப்பும் தேர்ந்து நன்றாக வாழும் தகுதியோடு வெளியேறலாம். இத்தனை நிறுவனங்கட்கும் தொடக்கத் தில் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் என்ற மாநிலப் பகுதிகளிலிருந்து பழுத்த அநுபவம் மிக்க பேராசிரியர்களே தொடக்கத்தில் தலைவர்களாக நியமிக்கப் பெற்றனர். நல்ல அநுபவம் பெற்ற பேராசிரி யர்கள் நியமனம் பெற்றும் பணியாற்றினர். அழகப்பா ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் 1950 ஜூலை முதல் தமிழ்ப் பேராசிரியனாக நியமனம் பெற்றுப் பத்தாண்டுகள் (1950-66) பணியாற்றினேன். י א", לאלי, י: கல்லூரி தொடங்குவது எளிது. அதனை நன் முறை. யில் செயற்படச் செய்வது மிகவும் அரிது. கல்லூரியின் குறிக்கோளையே அறம், அன்பு, பணி' என்று குறித்