பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 மலரும் நினைவுகள் பெயரால் உமையாள் விடுதி எனப்பெயர் சூட்டினார். தாய்க்கும் உணவுக்குந்தானே அதிக சம்பந்தம்? அடுத்துத் தொடங்கப் பெற்ற விடுதிக்கும் தம்மீது அதிக அன்பு காட்டிய தாய்மாமன் பெயரை வீரப்ப அம்மான் விடுதி" என்று திருநாமம் இட்டு வழங்கினார். தமக்குத் தொழில் துறையில் உறுதுணையாக இருந்த கேரளத்தைச் சார்ந்த மாங்கொம்பு ஆண்டி அய்யர் பெயரை'மாங்கொம்பு ஆண்டி அய்யர் விடுதி” என்ற பெரால் வழங்கினார். விசாலாட்சி விடுதி தோன்றிய காரணத்தை நினைவுகூர முடியவில்லை. பொறியியல் மாணவர்க்கென நிறுவப் பெற்ற அரைவட்ட வடிவமான விடுதிக்கு குப்புசாமி நாயுடு விடுதி' எனப் பெயரிட்டு அவர் வாய்ச் சொல்லால் உதவின நிகழ்ச் சியை நினைவுகூரும் வகையில் வரலாறு படைத்தார். டாக்டர் சண்முகம் செட்டியார் அவர்களின் நினைவாகச் சண்முக நூல் கிலையம் எழுந்த்து. இந்த விடுதியின் திறப்பு விழாவில் இந்த வரலாற்றை வள்ளல் அவர்களே வரவேற்புரையில் வெளியிட்டார்கள். இந்த விடுதியைத் திறந்து வைத்தவர்கள் மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் சிந்தாமணி தேஷ்முக்; திருமதி துர்க்காபாய் தேஷ்முக்கும் அவருடன் வந்திருந்தார்கள். ஒரு சமயம் வள்ளல் பம்பாய் நகரில் நட்சத்திரத் தங்கும் விடுதியில் தங்கியிருந்தபோது திடீரென்று பங்குச் சந்தையில்’ (Share Market) பங்குகளின் விலை மிகத் தாழ்ந்த நிலைக்குச் சரிந்தது. இதில் வள்ளலுக்கு இலட்சக் கணக்கான ரூபாய் இழப்பு. மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப முடியுமா? என்ற ஐயமும் எழுந்தது. கூத்தாட் டவைகுழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அது விளிந் தற்று. குறள்-332 என்பது தானே செல்வத்தின் தன்மை? திண்ணிய மனம் உடையவராதலால் மனம் உடைந்து போகவில்லை, இவரைப்போல் இவர்தம் நண்பர்கள் பலரும் அந்த விடுதி