பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளல் டாக்டர் இராம. அழகப்பச் செட்டியார் 365 யில் தங்கியிருந்தனர். அவர்களுள் எவரும் இவர் அறைக்கு வந்து ஆறுதல் சொல்லவில்லை. ஆனால் கோவையைச் சார்ந்த ஜி. குப்புசாமி நாயுடு என்பார் மட்டிலும் இவர் அறைக்கு வந்து, டாக்டர் செட்டியார், கவலைப் படாதீர்கள். வாழ்க்கையில் ஏற்றமும் இறக்கமும் வருவது இயல்பு; அஃது இறைவன் கட்டளை. தற்சமயம் உங்கள் தேவைக்கு நான் உதவுவேன்' என்று சொல்லிப்போனார். கேட்டிலும் உண்டோ? உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல் குறள்-796) என்ற குறளுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார் திரு நாயுடு அவர்கள். வள்ளல் அவர்கள் திரு. நாயுடு அவர் களிடம் எந்தப் பண உதவியும் பெறவில்லை. ஆனால் அவர் நல்லெண்ணத்தைப்பாராட்டும் முகத்தான் அவர்கள் குடும்பத்திலுள்ள ஆண்கள் பெண்கள் உட்பட அனைவரை யும் விழாவிற்கு அழைத்து மேடையில் இருக்கை தந்து சிறப் பித்தார். பலர் முன்னிலையில் இந்த நல்லெண்ணத்தின் நினைவாக (நான் எந்த உதவியும் பெறவில்லை) இந்த உணவுவிடுதிக்குக்குப்புசாமி நாயுடுவிடுதி” என்று பெயரிட் டேன். ஆனால் இப்பொழுது சிந்தாமணியே (டாக்டர் சிந்தாமணி தேஷ்முக் அவர்களைச் சுட்டிக் காட்டி) நமக்குக் கிடைத்திருக்கின்றது. சிந்தாமணி நாம் நினைப் பதை எல்லாம், கேட்பதையெல்லாம் தரும் என்பதை நீங்கள் அறிவிர்கள். இனி நமக்குக் கவலைஇல்லை’ என்று சொல்லி முடிக்க விழாவிற்கு வந்திருந்த பெரியோர்களின் கை தட்டல் ஒலி விண்ணைப் பிளந்தது. பல துறைகளிலும் வல்ல.-சிறந்த-பெரியவர்களை கட்டட அடிக்கல்நாட்டுவதற்கோ அன்றிக்கட்டடம் திறப்ப தற்கோ அழைத்துவருவார். இரவிலும்மாலையிலும்விருந்து கள் நடைபெறும் பெரும்பாலும் இவ்விருந்துகள் பலநகர் விளையாட்டரங்கு முற்றத்தும் நேரு பூங்காவிலும்தான் நடைபெறும். கல்லூரிப் பேராசிரியர்கள், ஊரில் சில முக்கிய