பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/386

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளல் டாக்டர் இராம. அழகப்பச் செட்டியார் 369 டிாடி மகிழ்ந்தனர் புலவர்கள். நம் வள்ளல் காலத்திலும் அவர் நிறுவிய கல்லூரியிலேயே பணியாற்றும் புலவர் அப்பெருமகனைப் பாடி வள்ளலின் வரலாற்றுக்கு இலக்கியம் படைத்தது தமிழ்ப் புலவர்களின் பெருமிதத் தையும் செய்ந்நன்றியுணர்வையும் காட்டுவதாக அமைந் துள்ளது மாணிக்கனார் கொடைவிளக்கு . தொழுநோயால் தொல்லைக்குள்ளான வள்ளல் உடற்கல்விக் கல்லூரித் தொடக்க விழாவிற்குச் (27-8-56) சென்னையிலிருந்து வந்தபோது உடல் நிலை மிகவும் சீர்கெட்டிருந்தது: படுத்த படுக்கை நிலை. கல்லூரி யிலிருந்தபோது ஆயிரக்கணக்கான மாணவர்களைத் தம் அருகே அழைத்துத் தனித்தனியாகக் கண்டு அவர்தம் படிப்பு நலன், பிற நலங்களை உசாவியறிந்தார். இந் நிலையை நேரில் எம்போலியர் தந்தையை விடப் பரிவு மிக்க வள்ளலின் பாசத்தைக் கண்டு வியந்து போனோம். ஆண் மகவு இல்லாத வள்ளல் அத்துணை மாணவர்களை யும் தம் மக்கள் போல் கருதிப் பழகிய காட்சி இன்றும் (13-11- 89) என் மனத்தில் பசுமையாக உள்ளது. நான் துறையூரில் பணியாற்றிய 9 ஆண்டுக் காலத்தில் எனக்கும் மகப்பேறு இல்லை; பிள்ளைகளைச் சேர்க்கவந்த முதியவர் களில் சிலர் என் மக்கட்பேற்றினை வினவியபோது என் பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் அனைவரும் என் மக்களே' என்று வழக்கமாகச் சொல்லி வந்த காட்சி நினைவிற்கு வந்தது. கண்கள் குளமாயின. 'தமிழ்க்கடல் ராய. சொக்கலிங்கம் பெருந் தமிழ்ப் புலவர். வள்ளலோடு நெருங்கிப் பழகிய ஒரு பெருந்தகை. வள்ளலுக்குத் தமிழில் நல்ல ஈடுபாட்டை ஏற்படுத்தியவர். தமிழ் இலக்கியத்தின் சிறப்பையும் பெருமையையும் வள்ளலுக்கு அறிமுகம் செய்து வைத்த பெருமகனார். வள்ளல் உடல் நலத்தோடு இருந்த காலத்திலும் உடல் நலம் குன்றிய காலத்திலும் உடனிருந்து தமிழமிழ்தம் ஊட்டி அவர்தம் மனம் மகிழச் செய்தவர். இவர் என் ம நி-24