பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/392

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளல் டாக்டர் இராம. அழகப்பச் செட்டியார் 375 கூறிய அறிவுரையை எல்லாக் காலத்திலும் மாணவர்கள் சிந்திக்கத்தக்க அறிவுரையாக அமைந்தது. இத்தகைய வள்ளலுக்கு இயற்கையாகவும் செயற்கை யாகவும் வந்த தொல்லைகள் துன்பமாலை"யாக வடி வெடுத்தன. இயற்கையில் வந்தது குட்டநோய்; செயற்கை யாக வந்தவை தில்லிமாநகரில் விடுதியொன்றில் தங்கி யிருந்தபோது குளியலறையில் வழுக்கிவிழுந்து காலொடிந் தது: கண்ணனுார் (கேரளம்) உமையாள் நெசவாலையில் மூன்றடுக்குமாடியிலிருந்து அறிவயர்ந்துவீழ்ந்தது.தலையில் ஏற்பட்ட பலத்த அடியினால் நினைவிழந்து சில திங்கள் வேலூர் C.M.S. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஒருவாறு பிழைத்தெழுந்தார். இந்தத் துன்பமாலையை, தில்லியிற் காலொடிந்தான்; தென்னாலை மாடிமேல் வெல்லும் அறிவயர்ந்து வீழ்வுற்றான்: கொல்லுகின்ற குட்ட நோய்ப் பட்டான்; பொழுதுபடா ஈகையால் சற்றுநோய் வென்றான் தணித்து.' என்று பாட்டாக வடித்துக் காட்டுவர் பெரும் புலவர் வ. சுப. மாணிக்கனார். வள்ளல் அழகப்பர் உயர்ந்த வடிவழகையும் பெற் றிருந்தார். பொன்மனச் செம்மலாகத் திகழ்ந்தவர். செம் மேனி எம்மா னாகவும் காட்சியளித்தார். நெற்றியில் திலகம் எடுப்பாகத் திகழும். செல்வச் செருக்கு இல்லா தவர். எளிய ஆடையையே விரும்புபவர். கூர்த்தமதியினர்: கொடையால் பெயர் பெற்ற பெரியார். நாடியவரைத் தோள் தழுவிப் பேசும் நற்பண்பு மிக்கவர். இவர்தம் ஆங்கிலப்பேச்சு கேட்டாரை ஈர்க்கும்; கேளாரையும் கேட்கும் பேறு இல்லையே என்று வருந்தச் செய்யும். தமிழ்ப் பொழிவில் பேச்சுத்தமிழ் நடையாடினாலும் 12. கொடை விளக்கு-91