பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/402

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலெக்டர் தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் 388 நிற்கும் கவிஞன் யார் தெரியுமா? அவர்தான் படிக்காசுப் புலவர். இங்ங்ணம் தொண்டைமான் கைகளை ஆட்டி ஆட்டி தமக்கே உரிய முக பாவனையுடன் பாடலை விளக்கும் பாணி இன்னும் என் மனத்தில் பசுமையாகவே உள்ளது. அவர்தம் குரல் இன்றும் என் காதில் ரீங்காரம் செய்கின்றது. அவர்தம் கார்மேனி உருவத்தை என் கண்கள் மானசீகமாகக் காண்கின்றன. 2. ஞான சம்பந்தர் தம்மை இறைவனுடைய சேயாகவே பாவித்து ஒழுகி வந்தார். தம்மை இறைவனது சேயாகப் பாவிப்பதிலும் இறைவனையே தம் சேயாகப் பாவிப்பதிலும் பக்குவம் பெற்றிருந்தார்கள் Í_j @} பெரியோர். தமிழ் நாட்டில் எழுந்த பிள்ளைத் தமிழ் நூல்கள் எல்லாம் இறைவனைப் பக்தன் குழந்தையாக வழிபடும் முறைதான் என்று கொள்வதில் தவறில்லை. இன்னும் ஒரு சிறப்பு உண்டு, இறைவனை மட்டிலும் குழந்தையாக ஆக்கிக் கொண்டால் போதாது; பக்தனும் தன்னைக் குழந்தையாக ஆக்கிக் கொள்ள வேண்டும். நாம் ஐந்து வயதுப் பாலகனாக இருக்கும்போது அரச மரத்துப் பிள்ளையாரை நெருங்கி அவருடன் விளையாடத் தான் செய்தோம். அவருடைய கொம்பைப் பிடித்து அசைத்து, அவருடைய காதைப் பிடித்துத் திருகிக் குறும்பு கள் செய்தோம். இல்லையா? நாமும் குழந்தையாக இருந்த காரணத்தால்தான் அவ்வாறு உறவு கொண்டாட முடிந்தது. வயது ஏற ஏற கடவுள், தெய்வம், பாவம், புண்ணியம், முத்தி, நரகம் என்றெல்லாம் அறிய அறிய நாம் இறைவனை நெருங்கவே அஞ்சுகின்றோம்; எட்ட நின்றே கும்பிடு போட்டு விட்டுத் திரும்பி விடுகின்றோம். அறிவு வளர வளர நமக்கும் ஆண்டவனுக்கும் இடையே யுள்ள தூரமும் அகன்று கொண்டே வருகின்றது.இறைவன் குழந்தையாகவும், நாம் மனிதனாகவும் இருந்தால் பயன் இல்லாது போனாலும் போகும். ஆதலால் நாமும்-பக்தி செலுத்த விரும்பும் நாமும்-குழந்தையாகவே ஆக்கிக் ம நி-25