பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/404

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலெக்டர் தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் Ꮽ ☾ கண்டு மகிழ்கின்றது. அந்தக் கற்பனைக் கண்ணம்மாவின் கன்னத்தில் முத்தமிட்டு முத்தமிட்டுக் கள்வெறி கொள்ளு கின்றது அவரது தெய்விகத் திருவுள்ளம். இறுதியாக, இன்பக் கதைகள் எல்லாம் உன்னைப்போல் ஏடுகள் சொள்வதுண்டோ? அன்பு தருவதிலே-உனைநேர் ஆகுமோர் தெய்வம் உண்டோ? என்று அதன் மழலை மொழிகளில் மெய்மறந்து பாடுகின் றார்; உள்ளத்தைப் பறி கொடுக்கின்றார். 'கண்ணம்மா குழந்தை தான்; குழந்தையுருவில் காட்சி நல்கும் தெய்வம் தான் அது பாரதியாருக்கு என்று தெரிந்து கொள்ளுகின் றோம் நாம்' என்று கூறித் தம்மை-ஏன் நம்மையும்அந்தக் கண்ணன் ஆயர்பாடியில் வளர்ந்த காலத்திற்குக் கொண்டு சென்று விடுவார். இங்ங்ணம் பாரதியார் பாடல்களில் தம் உள்ளத்தைப் பறிகொடுத்த திரு. தொண்டைமான், குலசேகராழ்வார் பாசுரங்களில் தம்மையே மறந்து ஆழங்கால் பட்டு விடு வார். குழந்தை என்றால் அதுதான் அன்னையின் உடைமை, சுவர்க்கம் எல்லாம். குழந்தை பேசும் மழலை மொழிகளிலே கற்பனைக்கும் எட்டாத வேத கீதங்களைதேவ கீதங்களை-எல்லாம் கேட்பாள். அது குறுகுறு நடந்து சிறு கை நீட்டி நடந்து வந்து-தான் உண்ணும் உணவை அளைந்தால் அது கூழாக இருந்தாலும் அமுதாகி விடும் அந்தத் தாய்க்கு. தன் முகத்துச் சுட்டி துரங்கத் துரங்கத் தவழ்ந்து வரும் கண்ணனைக் கட்டி அணைத்துக் கொள்ளும் யசோதை நிலையிலுள்ள பெரியாழ்வார் அக் கண்ணனோடு ஒன்றியே விடுவார். சேரர்கோன் குல சேகரப் பெருமாளும் அப்படித்தான். தம்மைத் தேவகி யாகவே பாவித்துக்கொண்டு யசோதைப் பெருமாட்டி அநுபவித்தவற்றையெல்லாம் தாம் அநுபவிக்கக்கொடுத்து வைக்கவில்லையே என்று தம்மையே நொந்து கொள்ளு