பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/406

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவெக்டர் தொ. மு: பாஸ்கரத் தொண்டைமான் 383 சொல்நெஞ்சுழல அச்சூரனைக் கொன்ற சொக்கேசர்பிள்ளை வன்னக் கிளியன்ன செந்தில் குறத்திக்கு மாப்பிள்ளையே என்ற பாடலுடன் தம் உரையை முடிப்பார். தினைவு-2 : திரு. தொண்டைமானிடம் பேசும் பொழுதெல்லாம் இலக்கிய சல்லாபந் தான். அதுவும் கம்பனிடம்தான். கம்பனின் இராமகாதையில் ஈடுபடு பவர் அவனுடைய சில தனிப்பாடல்களிலும் உள்ளம் பறி கொடுத்துப் பேசியதை அநுபவித்திருக்கின்றேன். இப்படி அவர் அநுபவித்த பாடலை ஒரு சமயம் என்னிடம் (எங்கு. எப்போது என்பது நினைவில்லை) பேசி அதுபவித்தார்; என்னையும் மெய்மறக்கச் செய்து விட்டார். பாடல் தனிப் பாடலாக இருந்தாலும் அதற்கு ஒரு சூழ்நிலையை உரு வாக்கி, அந்தச் சூழ்நிலையில் அப்பாட்டு பிறந்த வரலாற்றை ஒரு கதை போல் கூறி நம்மை மகிழ்விப்பார். இது திரு. தொண்டைமானுக்கு ஒரு கைவந்த கலை. நாங்கள் பேசிக்கொண்டிருந்த போதே, மிஸ்டர் ரெட்டியார், கம்பனைப்பற்றி ஒருவரலாறு உண்டு. அஃது உங்கட்குத் தெரியுமா?’ என்று தொடங்கியவர் அந்தக் கம்பன் செய்த ஒரு பயணத்தைப்பற்றிக் கூறத் தொடங்கி விட்டார் பாட்டி பேரனுக்குக் கதை சொல்வதுபோல, 'கம்பன் ஒரு சிறு கிராமத்தை நோக்கிப் பயணம் புறப் பட்டான். அவன் சென்றஇடம்எல்லாம் தமது மூதாதையர் நமக்குக் கொடுத்த தமிழ்ச் செல்வங்களையெல்லாம் பிறருக்கு வாரி வழங்கி வந்தான். இந்தப் பயணத்தில் அவனது மடக்கு தொலைந்து போய்விட்டது. மடக்கு” என்றால் கத்தியும் எழுத்தாணியும் சேர்ந்த ஒர் ஆயுதம். பழைய காலத்தில் பனையோலையில் எழுத்தாணி கொண்டுதானே எழுதி வந்தார்கள்? அந்தக் காலத்தில் தாளும் பேனாவும் இல்லையல்லவா?’’