பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/407

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔9{} மலரும் நினைவுகள் கம்பன் வைத்திருந்த மடக்கு நல்ல துவைச்சல் கொடுத்துச் செய்யப்பட்டது. இங்ங்ணம் துவைச்சல் கொடுத்து மடக்கு செய்யும் கருமான்கள் இங்கொருவரும் அங்கொருவருமாகத்தான் இருந்தார்கள். அக்காலத்தில் மடக்கு அரியபொருள். இதற்குச் சந்தனம் பூசி மாலை சாத்தி வழிபடும் வழக்கம் கூட இருந்தது (இப்படிக் கூறிய போது நான் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் படித்த காலம் நினைவிற்கு வந்தது. ஆசிரியர் இலிங்கச் செட்டியார் ஏட்டில் எழுத்தாணி கொண்டு எழுதியதும் அந்த எழுத்தாணி சரசுவதி பூசையன்று சந்தனம் பூசி மாலை சூட்டி வழிபட்டதையும் கண்ட காட்சி எனக்கு நினைவிற்கு வந்தது). கம்பன் காஞ்சி மாநகருக்கு அருகிலுள்ள மாவண்டுருக்கு வந்து சேர்ந்தான். மடக்குத் தொலைந்த செய்தியைக் கருமானிடம் சொன்னான். கருமானும், "அப்படியா! Ꮌ ©j © 6a வேண்டா. நாளையே புதிதாக ஒன்றைச் செய்து தருவேன்' என்றான். கம்பனுக்கோ ஐயப்பாடுதான். நாளை என்றால் குறைந்தது ஒராண்டாவது ஆக வேண்டாவோ? இஃது அவர்களுடைய குலதர்மத்திற்கே விரோதமல்லவா?’’ என்று எண்ணினான் (நான் நாட்டுப் புறத்திவிருந்து வந்தவனாதலால் கிராமத்தில் தச்சர்களும், கொல்லர் களும் சொல்லும் வாக்குறுதிகளை நான் நன்கு அறிந் திருந்தேன்). ஆனால் இந்தக் கருமான் அரிச்சந்திரன் வமிசத்தவன் போலும். மறுநாளே முதல் நாள் சொன்ன படியே புதிய மடக்கு ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்து விட்டான் கருமான். நல்ல தந்தப்பிடி. நல்ல துவைச்சல், கம்பனுக்கோ அளவற்ற திருப்தி. ஒலையிலே எழுதிப் பார்த்தான். அது நன்றாக எழுதிற்று. உடனே கம்பன் கருமானுக்குச் சான்றிதழ் வழங்கினான். சான்றிதழ் ஒருபாடல் தான்." என்று கூறியவர் சான்றிதழை உரைநடையில் தருகின்றேன்’’ என்று தொடங்கி விட்டார்.