பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/408

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலெக்டர் தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் 39 to கருமானின் பெயர் சிங்கன் (நரசிங்கன் என்பதன் குறுக்கம் போலும்). மாவண்டுர் நத்தத்தில் அவனது உலைக்களம் இருந்து வந்தது. அவனது உலைக்களத்தில் யாரெல்லாம் வந்து தவம் கிடந்தார்கள் தெரியுமா? ஆழியான்-சக்கரப் படையை ஏந்திக் கொண்டிருக்கும் திருமால். துட்டர்களை திரசிக்க வேண்டும், அதற்குக்கூர்மை யான சக்கரப்படை வேண்டாமோ? அதற்காகச் சக்கரம் செய்து தருமாறு வேண்டி நிற்பான், ஒருபுறம். பரமசிவன் மற்றொருபுறம் நிற்கின்றான். பகைவர்களை ஒழிப்பதற்கு மொட்டை மழு ஒன்றிருந்தால் போதும்; விரைவாக மழு வொன்றைத் தட்டிக் கொடுக்குமாறு வேண்டுகின்றான். இவனுடைய அருமை மகன் சின்ன முருகன் துடிப்பாக நிற்கின்றான். குன்றினுள் இருக்கும் சூர்பதுமனை ஒழித்துக்கட்ட வேல் ஒன்று வேண்டும். இது மிக அவசர மான காரியம். எனக்கு வேல் ஒன்று அடித்துக் கொடுத்து விட்டு மறுகாரியம் பார்' என்று துடித்து நிற்கின்றான் கோழிக் கொடியோனான குமரப்பன். அடுத்து வருபவன் நான்முகன்; நம் தலையில் நமது தலையெழுத்தைப் பொறிக்கும் பணி அவனுக்கு. இவனது அவசரமோ சொல்ல முடியாது. குடும்பக் கட்டுப்பாடு இல்லாமல் புலபுலவென கலகலவென குழந்தைகள் பிறந்த வண்ணம் உள்ளார்களே அவர்களின் தலையெழுத்தை உறுதியிட வேண்டாமா?' என்று கூறுவார். தொடர்ந்து இவ்வளவும் நடைபெறுவது எங்கே தெரியுமா? மாவண்டுர் சிங்கன் உலைக் களத்தில் தான். வீட்டிலிருந்துகொண்டு கட்டளையிட்டால் வேலைகள் நடைபெறுமா? எல்லோரும் உலைக்களத்திற்கு ஒட வேண்டும்; திருமாலின் செவ்வரியோடிய திருக்கண் களிலும், பரமனது நெற்றிக் கண்ணிலும், நான்முகனின் எட்டுக் கண்களிலும் உலைக்களத்தின் தீப்பொறி விழ வேண்டும். விழுந்து உறவாடத் தானே செய்யும். இனி பாவடிவில் அமைந்த சான்றிதழைப் பார்ப்போம்.