பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/412

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலெக்டர் தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் 395 எழுந்துள்ளன. இவற்றையெல்லாம் ஒருங்கு வைத்து எண்ணினால் ஓர் உண்மை புலனாகின்றது. என்று. கூறினேன். மேலும் தொடர்ந்து, கவிதையைப் படித்து அதிலுள்ள செய்திகளைப் பெருமூளை அறிந்ததும் அங்குத் தோன்றும் எண்ணங்களும் எண்ணக் கோவைகளும் மேற்பூத் தண்டைத் தூண்டி அதன்மூலம் தன்னாட்சி நரம்பு மண்டலத்தை இயக்குகின்றன. இம்மண்டலத்தின் இயக்கத்தால் சுரப்பிகள் (Glands) தூண்டப்பெறுகின்றன. அவற்றின் சாறுகள் குறிப்பாக மாங்காய்ச் சுரப்பிகளின் (Adrenal glands) சாறுகள் குருதியோட்டத்தின் கலந்து உடலெங்கும் உணர்ச்சி அலைகளை எழுப்புகின்றன . வாழ்க்கைய நுபவத்தில் இவ்வுணர்ச்சிகள் ஏற்படுங்க்ால் இத்தகைய உடல் மாறுதல்கள் ஏற்படுகின்றன என்பது உளவியல் காட்டும் உண்மை. வெகுளிச்சுவை, அவலச் சுவை, மருட்கைச்சுவை போன்ற சுவைகள் உள்ள கவிதை களைப் படிக்கும்பொழுது அவற்றால் பெறும் செய்திகள் பெருமூளையில் பல்வேறு எண்ணக் கோவைகளை எழுப்பி மேற்குறிப்பிட்ட நிலைமைகளை உண்டாக்குகின்றன என்று ஊகம் செய்யலாம். இதனால்தான் கவிதை யிலுள்ள கவிஞனின் உணர்ச்சிகள் நம்மிடமும்எழுகின்றன. உண்மையான கவிதையதுபவமும் நம்மிடம் உண்டா கின்றது. இத்தகைய முடிவுக்குக் கொண்டு செலுத்தக் கூடிய பல்வேறு கருத்துகளை நூலின் முதற்பகுதி ஆராய் கின்றது. உடலியல், உளவியல் பற்றிய கருத்துகள் பெரும் பான்மையான வாசகர்கட்குப் புதியனவாக இருக்கக் கூடுமென்று கருதி அவை சற்று விரிவாகவும் விளக்கமாக வும்-இந்நூலுக்கு அவை இடைப்பிறவரலாக இருக்குமோ என்று கூடக் கருதும் அளவுக்குக்-கூறப்பெற்றுள்ளன. இக் கருத்துகளைப் படங்களும் விளக்குகின்றன. இந்த நூலினைப் படிப்பவர்கள் நூலின் இப்பகுதியை ஒரு முறைக்குப் பலமுறை ஊன்றிப் படித்து அக்கருத்துகளைத்