பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/426

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜஸ்டிஸ் டாக்டர் எஸ். மகராஜன் 薬09 காட்சியை வால்மீகி எப்படிக் காட்டுகின்றார்: கம்பன் எப்படிக் காட்டுகின்றான்? என்று ஒப்பிட்டுக் காட்டும்போது இரங்கூன் கமலத்துக்கும் வைரத்திற்கும் உள்ள வேற்றுமையை வைர வியாபாரி காட்டும்போது நாம் உணர்வதுபோல் உணர்கின்றோம். நினைவிற்கு வரும் இரண்டு காட்சிகளை மட்டிலும் காட்டுவேன். (1) நாடக உத்தி என்று எடுத்துக் கொண்டால், ஹாலிவுட் டைரக்டர்கள் கம்பனிடம் பிச்சை வாங்க வேண்டும். கதையை நடத்தும் தோரணையில் மாத்திர மல்ல. வெறும் மெய்ப்பாடுகளுக்கே நாடகப் பாங்கை நல்கி விடுவான் கம்பன்' என்ற பீடிகையுடன் தொடங்கு வார் திரு. மகராஜன். 'கேகய நாட்டிலிருந்து அவசரம் அவசரமாக வருகின்றான் பரதன். கோசல நாடு இடுகாடு போலிருக் கின்றது. அரண்மனைக்குள் சென்று கைகேயியைக் கேட்கின்றான், எங்கே என் தந்தை என்று. வானகம் எய்தினான், வருந்தாதே' என்று நீலித் தனமாக மறு மொழி தருகின்றாள் அவனுடைய அன்புடைய அன்னை . இதைக் கேட்டதும் விழுந்து புரண்டு அரற்றுகின்றான். பின்னர், எனக்கு அப்பனும், ஆயும், பிரானும் இராமனே. அவன் காலில் விழுந்தால்தான் துயர் தீரும். எங்கே இராமன்?’ என்று சிரம்மேல் கரம் குவித்துக் கேட்கின்றான். கைகேயி அவன் கானகத்தான்' என்றாள். இன்னும் கேட்டுத் துன்புற வேண்டிய செய்தி எத்தனையோ?” என்று நினைத்துக் கலங்குகின்றான். * கானகத்துக்கு ஏங்கின காரணம் யாது?’ என்று வினவு கின்றான். இரண்டு வரங்கொண்டு, ஒன்றால் இராமனை வனத்திற்கு அனுப்பினேன்; மன்றொன்றால் அரசை உனக்கு ஆக்கினேன். இதைப் பொறுக்க மாட்டாமல் தசரதன் உயிர் துறந்தான்' என்றாள் அன்னை. இந்த சொல்லைக் கேட்டதும் என்ன நடந்தது? இராமனை