பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/428

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜஸ்டிஸ் டாக்டர் எஸ். மகராஜன் 41 I நிற்கின்றது' என்று தமக்கே உரிய முறையில் விளக்கம் தருவார். தொடர்ந்து வால்மீகியைக் கற்றால்தான் கம்ப னுடைய தனிப்பண்பு இன்னதென்பதைத் தெரிந்து கொள்ள முடியும். முதன் முதலாக இராமலக்குவணர்கள் சடாயுவைப் பார்க்கும்போது சடாயு, வால்மீகியின் சடாயு, ஒர் ஆலமரக் கிளையில் உட்கார்ந்திருக்கின்றான். பருமனான, வலிமையுடைய கழுகு அது என்று சொல்லி வருணனையை முடித்து விடுகின்றார் வால்மீகி. கம்பனுக்கு இந்த ஆலமரப் பின்னணி (Setting) பிடிக்க வில்லை. சடாயுவின் கழுத்துக்குக் கீழுள்ள மேனி பொன்னிறமாக இருந்தது. கழுத்தும் தலையும் ஒரே வெண்ணிறம், இது மந்திரகிரிமேல் சந்திர ஒளி படர்ந்த சிகரம் போலிருந்ததாம். இவ்வளவு கம்பீரமான பறவையை, பிராட்டிக்காக உயிரையே தியாகம் செய்யப் போகும் சடாயுவை, ஆலமரத்திலும் புளிய மரத்திலுமா அமர்த்தி வைப்பது? பின்னணியை மாற்றுகின்றான் கம்பன். கருமலையின் சிகரம் ஒன்று துருத்திக் கொண்டு நிற்கின்றது. அதை ஒட்டிய முற்றத்திலே சடாயுவை அமர்த்துகின்றான் கவிச்சக்கரவர்த்தி. முந்தொரு கருமலை முகட்டு முன்றிலில் சந்திரன் ஒளியொடு தழுவச் சார்த்திய அந்தமில் கணைகடல் அமரர் நாட்டிய மந்தர கிரியென வயங்கு வான்தனை" சொற்பங்கம் உறநிமிர் இசையின் சும்மையை அற்பகம் உறவரும் அருணன் செம்மலைச் சிற்பங்கொள் பகல் எனக் கடிது சென்றுநீர் கற்பங்கள் பலப்பல கண்டு ளான்தனை.* 3. ஆரணிய, சடாயுகாண்-3 4. டிெ டிெ-8