பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

多釜 மலரும் நினைவுகள் ஆனால் திருச்சி புனித சூசையப்பர் கல்லூரியில் சேர்ந் தமையால் என பட்டப் படிப்பு முடியும் வரை தந்தையாக நின்று அரவணைத்தும் கடிந்தும் என் கல்வி வளர்ச்சி குன்றாது செழிப்புடன் திகழக் காரணமாக இருந்தவர் முதல்வர் ஜெரோம் டி'செளசா என்று கூறின் அஃது எள்ளளவும் மிகையாகாது. இதனை நினைக்கும் போது நான்கு நினைவுகள் மலர்கின்றன. நினைவு-1 : 1934-35 இல் நான் இடைநிலை வகுப்பு முதலாண்டு படிக்கும்போது எனக்கு இயற்பியல் பேராசிரி யராக அமைந்தவர் தந்தை காம்பெர்ட் (Father Gombert) என்பார். இவர் ஃபிரெஞ்சு பாதிரியார். இவர்பேசும் ஆங்கிலம் மாணவர்க்குப்புரிவதில்லை. முதலாண்டு கால் ஆண்டு, அரையாண்டு முழு ஆண்டுத் தேர்வுகளில் மாணாக்கர்கள் இயற்பியலில் பெற்ற அதிகப்பட்ச மதிப் பெண்கள் 20 சதவிகிதத்திற்கு மேல் உயர்வதில்லை. கற்பிக்கும் முறையும் மாணாக்கர்களின் கவனத்தை ஈர்ப்ப தாக இல்லாமையும் பாடம் மனத்தில் நன்கு பதியாமை மற்றொரு காரணமாகும். ஆனால் பண்பாடு, மரியாதை இவற்றை நன்முறையில் கற்றது குறிப்பிடத்தக்கது. மாணாக்கர்கள் பல மாவட்டங்களைச் சேர்ந்த குக்கிராமங் களில் பாடங்களைத் தமிழில் கற்று வந்தவர்களாதலால் ஆங்கிலத்தில் கற்பிப்பதை விரைவாகப் புரிந்து கொள்ளும் பாங்கிலும் இல்லாமை அவர்களின்தேர்ச்சிக் குறைவிற்குப் பிறிதொரு காரணமாக இருந்தது. நடத்தை நயத்தையும் (Courtesy) சரியாக அறிந்து கொள்ளாத நிலையும் இவர் களிடம் காணமுடிந்தது. ஒருமுறை நான்பெற்ற காலாண்டு மதிப்பெண்களைத் தெரிந்து கொள்வதற்காக உயர்நிலைப் பள்ளிகளின் பழக்கப்படி நேராகப் பாதிரியார் மாளிகையில் தந்தை காம்பெர்ட் அறைக்கு நேராகச் சென்று விட்டேன். பேராசிரியர் அன்பாகத்தான் வரவேற்றார். நான் நாட்டுப்