பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/430

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜஸ்டிஸ் டாக்டர் எஸ். மகராஜன் 41 & quality) மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றது கம்ப ரமாயணத்தில். வால்மீகிக்கும் கம்பனுக்கும் சம்பந்தமே. இல்லை. எல்லாம் புத்தம் புதிய படைப்பு’’ என்று கூறுவார். காரைக்குடியிலிருந்தபோதே திரு. மகராஜனைச் சந்திக்கும் வாய்ப்புகள் குறைந்தன. 1960-ஆகஸ்டு முதல் திருப்பதியில் பணியேற்றேன். திரு. மகராஜனும் தாம் வகித்த பதவியில் பல உயர்வுகளை பெற்று எங்கெங்கோ சுற்றி இறுதியாக புதுச்சேரியில் சில ஆண்டுகள் தலைமை நீதிபதியாகப் பணியாற்றிச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக வந்து சேர்ந்தார். பல ஆண்டுகள் கழித்து இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின்போது சென்னை யில் (1968) சந்திக்கும் வாய்ப்பு பெற்றேன். நினைவு-4 இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் பல தடவை சந்திக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டன. மாநாட்டைக் கூட்டியவர்கள் ஒருநாள் அலங்கார வண்டி யில் பவனி வரும் நிகழ்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தனர். அண்ணாசாலையில் சில இடங்களில், மாநாட்டுப் பேராளர்கள், முக்கிய பெரியோர்கள் (WiP), முதலியோர் அமர்ந்து பார்த்துக் களிப்பதற்கு பல இடங்களில் இருக்கை வசதிகள் செய்யப் பெற்றிருந்தன. ஸ்பென்ஸருக்கு எதிரில், TWS-க்கு அருகில் உள்ள ஓர் இடத்தில் நானும் ஜஸ்டிஸ் மகராஜனும் சேர்ந்து அமர்ந்து பார்க்கும் நேர்வு ஏற்பட்டது. ஜஸ்டிஸ் மகராஜன் சதா வெற்றிலை, பாக்கு, புகையிலை”யை மென்று களிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பவர். அலங்கார வண்டிகளைக் கண்கள் கண்டுகளிக்க, வெற்றிலை முதலியவற்றை வாய்மென்று களித்துக் கொண்டிருந்தது. அருகில் அமர்ந்திருந்த நான் , எதை அநுபவிக்கின்றீர்கள்- அலங்கார வண்டிகளையா? அல்லது வெற்றிலை பாக்கு புகையிலையையா? என்று வினவ, உடனே "இரண்டையுந்தான்!” என்று அநுபவ சுகத்தோடுஅவர் மறுமொழிவந்தது. உடனே தான்