பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/443

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. பன்மொழிப் புலவர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர் சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர்' காரைக்குடி காந்தி சா. கணேசனின் அருளால் வள்ளல் அழகப்பர் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் பதவி வந்தது. 'கொடுக்கின்ற தெய்வம் இருந்தால் கூரையைப் பொத்துக் கொண்டு கொடுக்கும்’ என்பார்கள். என் வாழ்நாளில் இப்பதவி ஒன்றே என் முயற்சி சிறிதும் இன்றி-ஏன்? விண்ணப்பம் ஒன்றும் அனுப்பாமலேயே-என்னை நாடி வந்தது. காரைக்குடி வாழ்வில் எனக்குப் பல பெரியோர்கள் அறிமுகம் ஆயினர். இதற்குச் சா. கணேசனால் தோற்றுவிக்கப் பெற்ற கம்பன் கழகமும் அதன் ஆதரவில் ஆண்டுதோறும் நடைப்பெற்று வரும் கம்பன் திருநாளும் காரணங்களாயின. இங்ங்னம் எனக்கு அறிமுகம் ஆன பல பெரியோர்களில் பன்மொழிப் புலவர் தெ பொ. மீனாட்சிசுந்தரனாரும் ஒருவர். திரு. தெ.பொ. மீ. அவர்களை நான் நினைக்கும் போது பல்வேறு நினைவுகள் மலர்கின்றன. நாடு விடுதலை பெற்றபிறகு எல்லாத் துறைகளிலும் பல திட்டங்கள் தீட்டப்பெற்று முன்னேற்றத்திற்கு வழிகளாக அமைந்தன. வெள்ளையர் ஆட்சியின் போது வடமொழி, அறபு மொழி இவையே உயர்தனிச் செம்மொழிகளாகக் (Classical languages) கருதப்பெற்று வந்தமையால் இம்மொழிகட்கு. 1. வெற்றி வேற்கை-18, 19