பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/445

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.38 மலரும் நினைவுகள் என்ற ஒளவைப் பாட்டியின் வாக்கும் இப்பொழுது நம் நினைவில் குமிழி இடுகின்றது. ஆனால் பாவம், அந்த மலையாளப் பேராசிரியர் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப் பெறுவதற்குமுன்னரே திருநாடு அலங்கரித்து விட்டார்! இங்ங்னமே சென்னைப் பல்கலைக் கழகத்திலும் ஒரு திட்டம் நடைமுறைக்கு வந்தது. பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒருவரை அவர் திறமையைக் கருதி வயது அறுபதிற்கு மேலும் வைத்துக் கொள்ளலாம் என்றும், இஃது அறுபத்தைந்து அகவை வரையிலும் நீட்டப் பெற லாம் என்றும், ஆனால் ஆண்டுதோறும் மருத்துவர் சான்றிதழின் கனத்தால் இஃது ஒவ்வோர் ஆண்டாக உயர்த்தப் பெறுதல் வேண்டும் என்றும் துணைவேந்தர் டாக்டர் A. L. முதலியார் காலத்தில் ஒரு திட்டம் உருவாயிற்று. பேராசிரியர் W. R. இராமச்சந்திர தீட்சிதர் அவர்கட்கு உதவ வேண்டும் (இவரே திரு. முதலியார் அவர்களின் சிலையைப் பல்கலைக் கழக வளாகத்தில் நிறுவக் காரணமாக இருந்தவர்) என்ற கருத்தின் அடிப் படையில் இந்தத் திட்டம் உருவானாலும் பொதுமக்களின் குற்றச்சாட்டுக்கு இலக்காகக் கூடாது என்று கருதி அவர் வயதுடைய பேராசிரியர் ரா.பி. சேதுப்பிள்ளையும் இத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப் பெற்றார். பேராசிரியர் தீட்சிதர் படியேற முடியாத நிலையில் இருந்ததால் முதல் தளத்தில் இடம் பெற்றிருந்த வரலாற்றுத் துறை தரை தளத்தில் (இப்போது பல்கலைக் கழகத்தில் பாரத வங்கி இருக்கும் இடம்) இடம் மாறிற்று. ஆனால், பேராசிரியர் தீட்சிதர் ஓராண்டுக் காலத்திற்கு மேல் இத்திட்டத்தின் பயனை நுகர முடியாமல் திருநாடு அலங்கரித்தார்கள். பேராசிரியர் ரா.பி. சேதுப்பிள்ளை இத்திட்டத்தின் முழுப் பலனையும் நுகர்ந்தார்கள். பல்கலைக் கழகத்தில் கெளரவ டாக்டர் பட்டம் பெறும் அளவுக்கு இவரது ஆகூழ் துணை நின்றது. கோடி தொகுத்தாற்கும் துய்த்தல் அரிது’ (குறள்-377) என்ற பொய்யாமொழி யாரின் வாக்கும், வருந்தி அழைத்தாலும் வாராத