பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/454

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்மொழிப் புலவர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் 437 40 பக்கம் அச்சுவேலை நடைபெற்று முடிந்த நிலையில் வல்லுநர் ஒருவர் கிளப்பிய கருத்து வேற்றுமையை ஒப்புக் கொள்ளாமல் அச்சிட்ட பாரங்கள், அச்சிடப் பெறாத கைப்படி இவற்றைத் திரும்பப் பெற்றேன். இந்த நூலை *அரசுப் பாடநூல் வெளியீட்டுக் குழுவின் மூலம் வெளியிட முயன்றேன். பேராசிரியர் அ. ச. ஞான சம்பந்தம் இதை வெளியிட ஒப்புக்கொண்டு படிகளை ஏற்றார். சென்னைப் பல்கலைக் கழக ஆட்சிக் குழுவின் (Syndicate) உறுப்பினராக இருந்த தெ. பொ. மீ. இந்த நூலின் வரலாற்றை (கருத்து வேற்றுமையால் திரும்பப் பெற்ற கதையை!) அறிந்தவராதலால் இந்த நூல்பாடநூல் வெளியீட்டுக் குழுவினாலும் ஏற்கப்பெறாமல் என்னிடமே திரும்பி வந்தது. இத்தகைய குழுவிலும், பல்கலைக் கழக வல்லுநர் குழுவிலும், சிந்தனையும் விவேகமும் அநுபவமும் இல்லாதவர்கள் இடம் பெறுவதால் நல்ல திட்டங்களும் சிதைவுறுகின்றன. அணுக்கரு பெளதிகம்' என்ற நூலைப் பின்னர் தமிழ்ப் புத்தகாலயம்' என்ற தனியார் நிறுவனத் தின் மூலம் வெளியிட்டுப் பெரும் புகழ் பெற்றேன். இந்த நூல் பரிசு பெற்ற கதையையும் பல்கலைக் கழகம் தமிழ் வெளியீட்டுக் குழு இவை மூலம் வெளிவராமல் தனியார் மூலம் வெளிவந்த உண்மை வரலாற்றை அறிந்தால் அறிஞருலகம் சிரிக்கும்; தொடர்ந்து சிரித்துக் கொண்டே யும் இருக்கும். 1964-சனவரியில் டாக்டர் உமாயூன் கபீர் மத்திய அரசின் கல்வியமைச்சராக இருந்த காலத்தில் தில்லி மாநகரில் 26-வது உலகக் கீழ்த்திசை மாநாடு-கருத்தரங்கு நடைபெற்றது. இந்தப் பத்துநாள் கருத்தரங்கு விஞ்ஞான பவனில் நடைபெற்றது. இந்திய அரசு கருத்தரங்கில் பங்கு பெற்றவர்கட்கு விருந்தினராக இருந்தது. கருத்தரங்கில் பங்குகொண்டவர்கள் தங்குவதற்கு இந்திய அரசே பல இடங்களில் வசதிகள் செய்தது. என்னைத் திருவேங்கடவன்