பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/458

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்மொழிப் புலவர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் 441 கொள்ளும் பயனொன் றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும் அள்ளிப் பறித்திட் டவன்மார்பில் எறிந்து என் அழலைத் தீர்வேனே' -நாச். திரு. 13:8. என்று தன் அழலைத் (துக்கத்தைத்) தீர்த்துக் கொள்வ தாகக் கூறுகின்றாள். ஆட்டின் கழுத்தில் முலை போலே என் மார்பில் வியர்த்தமாக (வீணாக) முளைத்துக் கிடக் கின்ற இப்பாழும் முலைகளை வேருடன் பறித்து அவ னுடைய மார்பிலே விட்டெறித்து என் துக்கம் தீரப் பெறு வேன்' என்கின்றாள் இப்பாசுர அடிகளில். கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு’ என்றதனால் அளவிறந்த ஆற்றாமை புலப்படும். பகைவனை நோக்கி, உன்னை வேருடன் ஒழித்துக் கட்டுவேன். பார்!’’ என்பாரைப் போல உள்ளத்தில் உள்ள சினமும் துக்கமும் தோன்றச் சொல்லு வதாகும் இது. இங்கு கிழங்கு' என்பது ஆன்மப் பொருளைக் குறிப்பதாகும். கொங்கை தன்னைக் கிழங் கோடும் அள்ளிப் பறித்திட்டு எறிந்து என் அழலைத் தீர்வேனே என்றால் போதாதோ? அவன் மார்பில் எறிந்து' என்று கூறுவதற்குக் காரணம் என்? என்னில் : இம்முலைகளால் தான் படும்பாட்டை பெண்ணின் வருத்தம் அறியாத (நா. திரு 13:1) பெருமானான அவனும் படவேண்டும் என்ற கருத்தினால் என்க. இம் முலைகள் அவன் மார்பில் ஏறி அவனைக் கும்மிக் குமைக்க வேண்டும் என்று நினைக்கிறாள் ஆண்டாள். இந்தச் சிரமத்தை அவனும் பட்டானாகில் அதுவே இவள் அழல் தீர்த்தபடி போலேயாகும் என்பது கருத்து. இத்தகைய ஆண்டாளின் உட்கிடக்கையையொட்டியே நானும் பரிசு பெற்ற இந்த அரிய நூலைப் பன்மொழிப் புலவருக்கு அன்புப் படையலாக்கினேன். படையல் பாடலை நோக்கிய வண்ணம் அவர் ஒளிப்படத்தையும்