பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைத் திரு . எஸ். ஜெரோம் டி செளசா 27. 70 சதவிகிதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். நான் 80 சதவிகிதம் பெற்றிருந்தேன். இங்ஙனம் திரு. சவரிமுத்து மூலம் தரப்பெற்ற புதிய மருந்தால் வகுப்பில் நல்ல குணத்தைக் கண்டார் முதல்வர் ஜெரோம் டி’ செள சா. நினைவு- 8 : இடைநிலை வகுப்புப் பல்கலைக் கழகத் தேர் வில் நான் முதல் வகுப்பில் தேர்ச்சியடைந் தேன். தமிழ், கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங் களில் 60 சதவிகிதத்திற்கு மேல் பெற்றிருந்தேன். கணிதத் தில் 100 சதவிகிதம் பெற்றிருந்தேன். பி.எஸ்சி வகுப்பில் வேதியியலை முதன்மைப் பாடமாகவும், இயற்பியல் கணிதம் இவற்றைத் துணைப்பாடங்களாகவும் தேர்ந் தெடுத்துக் கொண்டிருந்தேன். இந்த ஆண்டுத் தொடக்கத் தில் (1936) கடுமையான வயிற்றுக் கடுப்பு (Dysentry) நோயால் தாக்கப்பெற்றேன். உணவும் செல்லவில்லை. மூன்று மாதத்தில் உடல்நிலை மிகவும் சீர் கெட்டது. அறையிலிருந்து வகுப்பிற்கு நடக்க முடியாத நிலை வகுப் பிற்கு வந்தாலும் பாடங்களை மனத்தில் ஏற்க முடியாத சோர்வு நிலை . ஆகவே படிப்பையே நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. ஊருக்கு வந்து விட்டேன். இந்த ஆண்டு (1936) என் திருமணமும் நடைபெற்று விட்டது. ஒன்றுவிட்ட அத்தை மகள் துணைவியானாள். படிப்புக்கு உதவி செய்வதாக மாமனார் வீடு ஒப்புக் கொண்டதால் திருமணத்திற்கு இசைந்தேன். பி.எஸ்.சி. முதலாண்டுப் படிப்பிற்கு உதவினர். இரண்டாம் ஆண்டு கைவிட்டனர். என் பட்டப் படிப்புக் காலம் மிகவும் சோதனையான காலமாக இருந்தது. இருப்பினும் நிலைமையை இறையருளால் சமாளித்தேன். முதல் வகுப்பில் தேர்ச்சியுற்றேன்; கல்லூரியில் முதல் மாணவ னாகவும் பல்கலைக் கழகத்தின் மூன்றாவது மாணவனாக வும் தேர்ச்சியடைந்தேன். பி. எஸ்சி, வகுப்பில் (1937ர் சேர்வதற்குப் பதிலாக இயற்பியல் பி.எஸ்சி (ஆனர்க)