பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/466

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்மொழிப்புலவர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் 449 சொல்லவேண்டும். தமிழ் வல்லுநராக வந்தவரல்லவா? தெலுங்கு நடையாடும் தேசத்தில் எதைச் சொன்னாலும் வேதவாக்குத்தானே. பயிற்சிக் கல்லூரியிலும் சரியாக வேலை இல்லை; பல்கலைக்கழகத்திலும் குறைந்த வேலை தான். இதனால் இந்தக் குப்பைகளை எழுதித் தள்ளி இருக்கின்றார். இவற்றுள் ஒன்று கூட தரமான நூலாக இல்லை’ என்று வாதிடலாமல்லவா? இதற்காகத்தான் இப்படி வினாக்களை விடுத்தார் என்பது என் ஊகம். இன்னும் சற்றுத்தெளிவாக வேலையின்மையைச் சுட்டிக் காட்டியிருந்தால் அவரிடம் மூக்கறுத்தலையே நடத்தி யிருப்பேன். இங்கிருக்கும் வல்லுநரில் ஒருவர் டாக்டர் மு.வ. இவர் எழுபதிற்கு மேற்பட்ட நூல்களை எழுதி யுள்ளார். இவர் பணியாற்றிய பச்சையப்பன் கல்லூரி யிலும் இப்போது பணியாற்றும் சென்னைப் பல்கலைக் கழகத்திலும் இவருக்கு வேலை இல்லை என்றா நினைக் கின்றீர்கள்? வேலைக் குறைவினாலா இத்தனை நூல்களை எழுதிக் குவித்தார்?' என்று கேட்டு அவர் மூக்கு உடை. படச் செய்திருப்பேன். அதற்கு வாய்ப்பு அளிக்காமல் ஒதுங்கிக் கொண்டது. இறைவன் திருவருள். இதனால் "ரசாபாசம் எழாமல் போய்விட்டது. இருபத்து ஆறு நூல்கள் மேடையின்மேல் உள்ளனவே. வல்லுநர் ஏதாவது கேட்க வேண்டுமல்லவா? நான் எழுதி பல்கலைக்கழகம் வெளியிட்டிருந்த முத்தொள்ளாயிர விளக்கம்’ என்ற நூலை எடுத்து வைத்துக் கொண்டு கேட் கின்றார். தெ.பொ. மீ முத்தொள்ளாயிரம் பற்றிப் பலர் எழுதியிருக்கின்றார்களே, நீங்கள் எழுதியதன் சிறப் பென்ன? நான் : ஆம்; உண்மையே. பலர் எழுதியுள்ளார்கள். பொதுமக்கள் கவிதைகளைச் சுவைக்கும் போக்கில் என்விளக்கம் அமைந்துள்ளது. ஆங்காங்குப் பிற இலக்கியங்: ம நி-29