பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/468

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்மொழிப்புலவர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் 451 கான் : முடியும். முதலாவது : கவிதைக்குரிய பொருள்களை நேராகக் கண்டு அவற்றைப் பாடினார். இரண்டாவது : அவர் வாழ்ந்தது சுதந்திரப் போராட்டக் காலத்தில். தேசிய கீதங்களால் புகழின் கொடுமுடியை எட்டிப் பிடித்தார். அவருடைய தோத்திரப் பாடல்கள், வேதாந்தப் பாடல்கள், தனிப்பாடல்கள் மக்கள் கவனத் தையும் கருத்தையும் ஈர்த்தன. அவருடைய சுயசரிதை” இலக்கிய நயமும் தத்துவ உண்மையும் கொண்டுள்ளமை யால் சிறந்த இலக்கியமாகத் திகழ்கின்றது. மூன்றாவது ; அவருடைய கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் என்ற மூன்றும் இலக்கிய நவநீதம். ஆனால் அவருடைய பாஞ்சாலி சபதம் அவருடைய இடைச் செருகலால் சிறிது தரம் குறைந்து விட்டது; சொட்டு வைத்தது போலாயிற்று. இப்போது தெ. பொ. மீ. குறுக் கிடுகின்றார். தெ. பொ. மீ ; எங்கு என்ன இடைச்செருகல் என் பதைக் காட்டி விளக்க முடியுமா? நான் : விளக்க முடியும்; விளக்குவேன். பாஞ்சாலி சபதம் ஐந்தாவது சபதச் சருக்கத்தில் வருகின்றது, கவிஞரே செய்த இடைச் செருகல். பிச்சே றியவனைப்போல்-அந்தப் பேயனும் துகிலினை உரிகையிலே உட்சோதியிற் கலந்தாள்;- அன்னை உலகத்தை மறந்தாள்: -ஒருமையுற்றாள். என்ற பகுதியினை அடுத்துவரும் ஹரி ஹரி ஹரி என்று தொடங்குவது முதல் மணிவண்ணா என்றன் மனச் சுடரே" என்ற அடிவரையில் உள்ள அடிகள் யாவும் இடைச்செருகல் என்பது என் கருத்து. திறனாய்வு நோக்கில் இதனைக் கூறுகின்றேன். தெ. பொ. மீ : (சிறிது சினத்துடன்) இஃது எப்படி இடைச் செருகலாகும்?