பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/475

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. பூதூர் மகாவித்துவான் கி.வேங்கடசாமி ரெட்டியார் திமிழ் உலகில் நான் மிக்க மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த பெரியோர்களில் முதலிடம் வகித்தவர் பன்மொழிப் புலவர் வே. வேங்கடராஜூலு ரெட்டியார் அவர்கள். இவருக்கு அடுத்த படியாக என் உள்ளத்தில் நிலையாக இடம் பெற்றவர்கள் வைணவ உலகில் பூதுரர் சுவாமிகள்’ என்றும் தமிழ் உலகில் மகாவித்துவான் கி. வேங்கடசாமி ரெட்டியார் என்றும் வழங்கப்படும். பெரியார் ஆவர். நான் சென்னைக்கு வரும்போதெல்லாம் பன்மொழிப் புலவர் இல்லத்தில்தான் தங்குவேன். அப்போதெல்லாம் பூதூர் ரெட்டியார் பேச்சு வரும். பன்மொழிப்புலவர் பேச்சைத் தவிர அவர் இல்லத்தில் பணிபுரிந்து வந்த கோவிந்தன் என்ற வேலையாள், பன்மொழிப் புலவர் பரிந்துரையால் மாக்மில்லன் அச்ச கத்தில் பணியேற்ற ஆறுமுகம் இவர்களும் தம் பேச்சில் பூதூர் ரெட்டியார்பற்றி மிகப்பெருமையாகப் பேசியதைக் கேட்டதுண்டு. ஆனால் நான் சென்னைக்குச் செல்லும் நாட்களும் பூதூர் ரெட்டியார் சென்னைக்கு எழுந்தருளும் நாட்களும் ஒத்துவராததால் சென்னையில் பன்மொழிப் புலவர் இல்லத்தில் சந்திக்கும் வாய்ப்பு நேரிடவில்லை. துறையூர் வாழ்வுக் காலத்தில் இவரைச் சந்திக்கவே. இல்லை.