பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/477

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.# 60 மலரும் நினைவுகள் என்ற அதிவீரராமபாண்டியன் திருவாக்குப்படி எங்கள் கேண்மைவளர்ந்துவந்தது. ஒருநாள் என் இல்லத்தில்இவருக் கும்.எஸ்.கே. இராமராசன், வேறு இருவர் ஆகியோருக்கும் ஒரு சிறு விருந்து வைத்ததாக நினைவு. அதன் பிறகு எங்களிடையே கடிதப் போக்கு வரவு தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டிருந்தது. 1953-56 முடிய பன்னிரண்டு முறை சென்னைக்குச் செல்லும் வாய்ப்புகள் இருந்தன. அதற்குப் பிறகும் 1960 மே முடிய சில அலுவல்கள் நிமித்தம் சென்னைக்கு வந்து கொண்டிருந்தேன். இப்படி வந்து கொண்டிருந்த போது பூதுரர் ரெட்டியார் அவர்களை பன்மொழிப்புலவர் இல்லத்தில் இருமுறை சந்தித்து அளாவளாவியதுண்டு. 1960-ஆகஸ்டு முதல் திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் பணியேற்ற பிறகு திரு. ரெட்டியார் அவர் களுடன் தொடர்பு அடிக்கடி நேரிட்டது. நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு.’ என்ற குறளுக்கு இலக்கியமாக அமைந்தார் திரு. ரெட்டியார். அடிக்கடிப் பழகியதால் திரு. ரெட்டியாரின் புலமை ஒளியும் நன்கு தெரிந்தது. அவர் உயர் பண்புகளை யும் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. திருப்பதியில் பணியாற்றிய முதல் ஆறாண்டுக் காலத்தில் சிறுவர்கட்கு: தமிழ்க் கல்வி வசதிகள் திருப்பதி யில் இல்லாததால் குடும்பம்.காரைக்குடியிலேயே இருந்தது. ஒவ்வொரு விடுமுறைக்கும் (செப்டம்பர், டிசம்பர், ஏப்பிரல்) திருப்பதியிலிருந்து காரைக்குடிவந்து போய்க் கொண்டிருந்தேன் திருப்பதியிலிருந்து. அதிகாலை 2-20க்கு புறப்படும் திருப்பதி விழுப்புரம் இருப்பூர்தி வண்டி விழுப்புரத்தை முற்பகல் 10 மணிக்கு வந்தடையும். 2. குறள்-783