பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/479

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 § 3 மலரும் நினைவுகள் திகழ்வதையும் இந்நூலில் காணலாம்; நேரில் பழகும் போதும் அறியலாம். இந்தக் காலத்தில் மகாத்மா காந்தியடிகள் மீது நெஞ்சு விடுதூது’ (1934) என்ற நூலின் மூலத்தில் ஒரு படியையும் தந்தார். நூல் மிக அருமையான நூல்; சொல் வளமும் பொருள்வளமும் என் உள்ளத்தை ஈர்த்தன. இதனைக் குறிப்புடையுடனும் ஆராய்ச்சி முகவுரையுடனும்- டாக்டர் அய்யர்வாள் பதிப்பைப் போல்-வெளியிட்டால் பலரும் விரும்பிப் படிப்பர் என்ற கருத்தைத் தெரிவித்தேன். இப்பொறுப்பை என்னையே ஏற்றுக் கொள்ளுமாறு பணித்தார். ஒப்புக்கொண்டேன். திருப்பதியிலிருந்த வரை வேலை பளுவாலும் வேறு பணி களில் ஈடுபட்டிருந்தமையாலும் இப்பணியை மேற் கொள்ள இயலவில்லை. ஒய்வு பெற்றுச் சென்னை வந்த பிறகும் கலைக்களஞ்சியம் (இரண்டாம் பதிப்பு) வெளி யிடும் பொறுப்பு வந்ததாலும் உடனே கவனிக்க முடிய வில்லை. என்றாலும், இப்பணியில் சிறிது சிறிதாக ஈடு பட்டு என்மன நிறைவிற்கேற்ப நூலை வெளியிட்டேன் (நவம்பர்-1982). நூலும் திருவேங்கடத்தான் திருமன்றம் (32. பெருமாள் முதலித் தெரு, இராயப்பேட்டை சென்னை-600 014) மூலம் வெளி வந்துள்ளது. இக்காலத்தில் (செப்டம்பர் 1964) பல்லாண்டுகள் பிஎச். டி. க்குப் பதிவு செய்ய முயன்றும் பதிவு செய்ய முடியாத முயற்சியும் கை கூடியது. நாலாயிரத் திவ்விய பிரபந்தத் தில் நம்மாழ்வார் தத்துவம்' என்ற பொருள்பற்றி ஆராயத் தீர்மானித்திருந்தேன். இப்பிரபந்தத்திலுள்ள கருத்துக் களையும் பன்னிரு திருமுறைகளின் கருத்துகளையும் (இலக்கிய நயம் பற்றியவை மட்டிலும்) ஒப்பிட நினைத் திருந்தேன். திரு. ரெட்டியாருக்கு இதுபற்றி எழுதி யிருந்தேன். நானும் சில ஒப்புமைப் பாடல்களைக் குறித்து வைத்திருந்தேன்; திரு. ரெட்டியாரவர்களும் சில வற்றைக் குறித்து வைத்திருந்தார்கள். விழுப்புர இருப்