பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/480

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூதூர் மகாவித்துவான் கி. வேங்கடசாமி ரெட்டியார் 463 பூர்தி நிலையத்தில் இரண்டு நூல்களையும் கையில் வைத்துக் கொண்டு பாடல்களையும் பாசுரங்களையும் ஒப்பிட்டு ஆராய்வோம். பிறப்பிலேயே வைணவராக இருந்தும் மறந்தும் புறந்தொழா மாந்தர் (நான்முகன் திருவந்தாதி-68) என்று தம்மைச் சொல்லிக் கொள் ளாமல் சைவ இலக்கியத்தில் ஆழங்கால் பட்டிருந்ததைக் கண்டு வியந்து போனேன். ஒப்புமைப் பகுதிகளை இவர் எனக்குக் காட்டிக் கொடுத்தது எனக்குப் பெரிதும் உதவியது. சைவ சமயத்தில் காழ்ப்பு சிறிதும் இல்லாத, பரந்த மனப்பான்மையுள்ள ஒரு வைணவராகத் திகழ்ந்த ஒரு பெருமகனாரை இவரிடம் காண முடிந்தது. இரு சமய இலக்கியங்களையும் பழுதற வோதிய பெரியார் இவர் என்பதைக் கண்டு தெளிந்தேன். ஓர் ஆறு ஆண்டு காலம் இவ்வாறு ஆராய்ந்து குறிப்புகளை நிரல் படத் தொகுத்து வைத்திருந்தேன். இவற்றை ஆங்கிலத்தில் 150 பக்கத்தில் ஒர் அரிய கட்டுரையாகவும் எழுதிவைத் திருந்தேன். ஆனால், என் ஆய்வுப் பொருள் தத்துவத் தைப் பற்றியிருந்தமையால் இந்த ஆராய்ச்சி என ஆய்வுக் கட்டுரைக்குச் சிறிதும் பொருந்தாது என்று அறுதியிட்டு இதனைச் சேர்த்துக் கொள்ளவில்லை. ஆனால் இவற்றை நான்கு கட்டுரைகளாக்கித் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தார் நடத்தி வரும் சப்தகிரி' என்ற திங்கள் இதழில் வெளியிட்டேன். இப்பயணத்தில் மற்றொரு சமயம் திருமலை மாலவனுக்கா? வேலவனுக்கா?’ என்ற பொருள் பற்றி ஆய்ந்தோம். ஏற்கெனவே பேராசிரியர் மு. இராகவய் utfärg, frff அவர்கள் "பூரீ திருவேங்கடமுடையான்' (ஆராய்ச்சித் தொகுதி 20-வது கட்டுரை) என்ற தலைப்பில் ஒர் ஆய்வு கட்டுரை வரைந்திருந்தார்கள். இக்கட்டுரையிலுள்ள கருத்துக்களை மறு ஆய்வு செய் தோம்; இதனால் கருத்துக்கள் மேலும் எங்கட்குத் தெளிவாயின.