பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/482

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூதூர் மகாவித்துவான் கி. வேங்கடசாமி ரெட்டியார் 46க் ரால் இளங்கோவடிகள் கூறியது அப்பெருமானைத் திரிவிக்கிரமனாகக் குறிக்கும் ஆழ்வார் பெருமக்கள் வழக்கு கட்கு மிகவும் ஒத்துள்ளதையும் கண்டோம். நெடியோனே வேங்கடவா! (பெரு திரு 3:9) என்ற குலசேகரப் பெருமாள் வாக்குடனும் தாள் பரப்பி மண்தாவிய ஈசனை’ (திருவாய் 3.3:11) என்ற சடகோபர் வாக்குடனும் ஒத்து வருவதையும் நினைத்தோம். நச்சினார்க்கினியரும் நிலம் கிடந்த நெடு முடியண்ணலை நோக்கி உலகம் தவம் செய்து வீடு பெற்ற மலை’ என்று திரிவிக்கிரமனாகவே திருமலை எம்பெருமானைக் கூறி மகிழ்வதையும் சிந்தையிற் கொண்டோம் . 2. மாயோன் மேய காடுறையுலகமும், சேயோன் மேய மைவரை யுலகமும்’ (தொல். பொருள். 5) என்ற நூற்பாவில் திருமாலுக்கு முல்லை நிலமாகிய காட்டையும் முருகனுக்குக் குறிஞ்சி நிலமாகிய மலையையும் உரியன வாகக் கூறியிருக்க, இளங்கோவடிகள் நெடியோன் குன்றம்’ என்று வேங்கடத்தை மாயோன் மலையாகக் கூறினது நியாயம் ஆகாது என்று சிலர் கூறும் வாதத்தை யும் கலந்து ஆய்ந்தோம். இதற்கு நாங்கள் கொண்ட முடிவு : இளங்கோவடிகளே அதே காதையில் பாண்டி நாட்டு அழகர் மலையையும் கூறியிருக்கின்றார் அல்லவா? அம்மாதிரியே திருவேங்கடத்தையும் அவர் மாலவன் குன்றமாகக் கருதுவது பொருத்தம் தானே. தொல்காப்பியர் ஒவ்வொரு கடவுளர்க்கும் நிலம் வகுத் திருப்பது உண்மை தான். ஆயினும் மலைப்பகுதியில் திருமால் கோயில் கொள்வது உண்டென்றால் அது பிழை யென்றும், அதனால் அத்திருமாலை மலைக்குரிய முருக னாக்கி விடுதலே தமிழ் நூல் முறையென்றும் துணிவது தான் மிகவும் விநோதமான போக்காகும். எனவே, இப்போக்கினை ஏற்றுக்கொள்வோமாயின், ஆழ்வார் பெருமக்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற திருமாவிருஞ்சோலை மலை, திருக்குறுங்குடி, திருநீர் ம. நி-80