பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/483

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 § 6 மலரும் நினைவுகள் மலை, திருமெய்யம், சிங்கவேள் குன்றம் (அகோபிலம்), திருக்கடிகை (சோழசிங்கபுரம்-சோளிங்கர்), பதரியா சிரமம், சாலிக்கிராமம் முதலாக மலைப்பகுதியில் கோயில் கொண்டிருக்கும் திருமால்களை என் செய்வது? அவர் களைக் காலி செய்வித்து முருகனுக்கு இடந்தருமாறு ஆணை பிறப்பிக்க முடியுமா? அன்றியும், மருதம் நெய்தல் நிலப் பகுதிகளில் கோயில் கொண்ட திருமால்; சிவபிரான், முருகன் முதலிய தெய்வங்களையும் அகற்றி விட்டு அவ்வந் நிலங்களுக்கு உரியவராகத் தொல்காப்பியத்தில் வரையறுக்கப் பெற்ற இந்திரனையும் வருணனையும் முறையே குடியேற்ற வேண்டியதும் இன்றியமையாததாகி விடும். இஃது எவ்வளவு அசம்பாவிதம்?-இவ்வாறு எண்ணி எண்ணிச் சிரித்து மகிழ்ந்தோம். 3. வடவேங்கடம் தென்குமரி ஆயிடை என்ற தொல்காப்பியத்தின் பாயிரமான பனம்பாரனாரின் நூற்பா அடியையும் சிந்தித்தோம். தமிழ்கூறு நல்லுலகத் திற்கு வடக்கேயுள்ள நிலப்பகுதியின் இயல்பினை வரலாற்றுப் பேரறிஞர் டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார் கூறியிருப்பதை திரு பூதுரர்ரெட்டியார் கவனத் திற்குக் கொணர்ந்தேன். அப்பொழுது இந்நூல் வெளிவர வில்லை, கருத்தை மட்டிலும் குறிப்பிட்டேன். டாக்டர் அய்யங்கார் அவர்கள் குறிப்பிடும் தமிழ்கூறு நல்லுலகிற்கு வடபால் உள்ள நாட்டுப் பகுதியும் சங்ககாலத்து வேங்கடப் பகுதியும் அகம்-275) இயற்கையமைப்பிலும் தட்பவெப்ப நிலைகளிலும் கிட்டத்தட்ட ஒன்றுபோல் காணப் படுகின்றன. இதனால் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் வட வேங்கடம் இன்னதென.வரையறை செய்ய முடிகின்றது. இவ்வாறு அவருக்கு விளக்கினேன் : “ தமிழ்கூறு நல்லுலகத்திற்கு வடதிசையில் மேற்குக் கடற்கரை யிலிருந்து கிழக்குக் கடற்கரை வரையிலுமுள்ள நீண்ட # . A History Tirupati-uż. 1 – 2. @$3 egy Gifuufsir திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும் -பக் 29-39.