பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/488

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூதூர் மகாவித்துவான் கி. வேங்கடசாமி ரெட்டியார் 471 புலக்கண் உற உரைகாண்பான்; நூலும் காண்பான்; போதகா சிரியனுமாய்ப் போந்தான் கண்டீர்; தலக்கணிவன் தனக்குநிகர் தானாய் நின்ற சான்றோன்காண் சுப்புரெட்டி என்பான் மன்னோ அறிவுடைநூல் பல தமிழில் தந்த நந்தம் அறிஞர்பிரான் சுப்புரெட்டி யாரென் றுற்றேன் இறையருளால் அறுபதாண் டெய்தி நின்ற இவன்திருவேங் கடத்தெந்தை யருளால் இன்னம் துறைபலவா விரிந்த பன்னுரல் தோய்ந்து தோய்ந்து சொல்லமுதம் நமக்களிக்க சிறுவர் தம்மோ டுறவினரும் அயலவரும் போற்ற வாழ்க: உறற்கரிய வளம்பலவும் உறுக மாதோ. து.ாயஉள்ளமும் திருமாலை நிரந்தரமாக நெஞ்சில் கொண்ட இப்பெரியாரின் வாழ்த்துக் கனத்தால் என் இலக்கியப்பணி நடைபெற்று வருகின்றது என்பது என் அதிரா நம்பிக்கை. 1982-இல் முத்திநெறி' என்ற தலைப்பில் வைணவ சித்தாந்தத்தைத் தெளிவாக விளக்கும் பாங்கில் கடித உத்தியை மேற்கொண்டு நூலொன்றை எழுதி வெளி யிட்டேன்.இதற்கு அணிந்துரை வழங்குவதற்குப்பொருத்த மானவர் திரு. ரெட்டியாரே என்று கருதி அவரை வேண்டி னேன். ஒப்புக் கொண்டு எழுதி வாழ்த்தினார். 1983 க்குப் பிறகு இவர் அருமைத் திருமகனார் (திரு. வே. இலக்குமி நாராயணன் B. E. (பொறியியல் துறையில் பணி யாற்றுபவர்) சென்னைக்கு மாற்றலாகி என் தெருவிற்கு அடுத்த தெருவில் வாழும்போது இப்பெருமான் பெரும் பாலும் இங்குத் தங்கியிருப்பார். இதனால் அடிக்கடி இவருடன் அளவளாவும் வாய்ப்புகள் ஏற்பட்டன. இவற்றால் யான் வைணவ இலக்கியங்களிலும் வைணவ தத்துவங்களிலும் பல நுட்பங்களை அறியவும் தெளிவு